சென்னை
தவெக அரசுக்கு எதிராக வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2026 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போது, த.வெ.க. தனது தேர்தல் அறிக்கையில் 5 எக்கருக்குக் குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகள், கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க் கடன் முற்றிலுமாகத் தள்ளுபடி செய்யப்படும்: 5 ஏக்கருக்குமேல் நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க் கடன்களில் 50 சதவிகிதம் தள்ளுபடி செய்யப்படும்” என்று அறிவித்திருந்த நிலையில், ஆட்சிக்கு வந்த த.வெ.க. அரசு குறு, சிறு விவசாயிகள் ரூ. 75,000- வரை பயிர்க் கடன் பெற்றிருந்தால் அவை முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்றும்: ரூ. 75,00-0 க்குமேல் கடன் பெற்றவர்களுக்கு ரூ. 35,000- மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என்றும், விவசாயிகளை தரம் பிரித்து ஒரு பகுதி கடனை தள்ளுபடி செய்து அறிவித்தது. இது. தமிழக விவசாயிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முழு வேகத்துடன் முயற்சிகள் மேற்கொண்டு, தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முடக்கப் பார்க்கிறது. எனவே மெத்தனப் போக்கோடு இருந்து வரும் த.வெ.க. கூட்டணி அரசைக் கண்டித்து, அதிமுக சார்பிலும், டெல்டா மாவட்ட விவசாய சங்கங்களின் சார்பிலும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
இந்நிலையில், த.வெக. கூட்டணி அரசு 6.8.2026 அன்று தாக்கல் செய்துள்ள வேளாண் நிதிநிலை அறிக்கையில், பயிர்க் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கவில்லை. எனவே விவசாயிகள் வங்கிகளில் பெற்ற பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாமல் அவர்களை வஞ்சித்து வருவதோடு; மேகதாது பிரச்சனையில் மெத்தனம் காட்டி வரும் த.வெக. அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் வருகின்ற 14ம் தேதி (வெள்ளிக் கிழமை) காலை 9.30 மணியளவில், தமிழகம் முழுவதும் அனைத்து வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்
தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு நான் தலைமையேற்க உள்ளேன். சென்னை மாவட்டம் நீங்கலாக, ஏனைய வருவாய் மாவட்டங்களில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டங்களுக்குத் தலைமையேற்போர் பட்டியல் இத்துடன் வெளியிடப்படுகிறது. வருவாய் மாவட்டங்களுக்கு உட்பட்ட கழக அமைப்பு ரீதியான மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஒன்றிணைந்து, இந்தக் கண்டன ஆர்ப்பாட்டங்களை மிகச் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்து நடத்திட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

சைதையில் வாகன போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள நடைமேடை அகற்றப்படுமா?
சென்னை:சென்னை சைதாப்பேட்டை ஜீனிஸ் சாலை முதல் பஜார் சாலை வரை சாலையோர கடைகள்






