சென்னை,
மத்திய பா.ஜனதா அரசு தொகுதி மறுவரையறை மசோதாவை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தைக் கூட்டி நிறைவேற்ற ஆலோசித்து வருகிறது. இதனால் தென் மாநிலங்களில் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் என்ற அச்சம் நிலவுகிறது. இந்த விவகாரம் குறித்து ஆலோசித்து உரிய முடிவெடுக்கத் தமிழக எம்.பி.க்களுடன் முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் காங்கிரஸ் எம்பிக்கள் மாணிக்கம் தாகூர், விஷ்ணு பிரசாத், ஜோதிமணி, விஜய் வசந்த், பிரவீன் சக்கரவர்த்தி, ப.சிதம்பரம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். விசிக தலைவரும் எம்பியுமான திருமாவளவன் மற்றும் அக்கட்சி எம்பி ரவிக்குமார், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி எம்பி நவாஸ் கனி, கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலா இரண்டு எம்பிக்கள், மதிமுக எம்பி துரை வைகோ ஆகியோரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
தமிழகத்தில் மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பிக்கள் மொத்தம் 57 பேர் உள்ள நிலையில், 19 எம்.பிக்கள் மட்டுமே இந்தக்கூட்டத்தில் பங்கேற்று உள்ளனர். 37 எம்.பிக்கள் கூட்டத்தை புறக்கணித்து உள்ளனர்.
தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான இக்கூட்டம் 2 மணி நேரம் நடைபெற்றது. இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்றக்கூடாது என்கிற கோரிக்கையை அனைத்து கட்சிகளும் முன் வைத்தனர்.

தொகுதி மறுவரையறை தொடர்பாக மக்களவை எம்.பி.க்களுடன் தமிழக முதல்வர் விஜய் ஆலோசனை
சென்னை,மத்திய பா.ஜனதா அரசு தொகுதி மறுவரையறை மசோதாவை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தைக் கூட்டி






