18. வெஃகாமை
பிறர் பொருளுக்கு ஆசைப்படாதிருத்தல்.
=========================================
நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும் (குறள் 171).
விளக்கம்:
உள்ளத்தில் நடுவு நிலைமை இல்லாமல் பிறர்க்குரிய நன்பொருளின்மேல் ஒருவன் ஆசை வைத்தால் அவனுடைய குடிகெட்டு அவனுக்குக் குற்றமும் அப்பொழுதே வந்து சேரும்.







