திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் உலகளாவிய முன்னாள் மாணவர்கள் கூட்டம் 2025, ஜனவரி 4-ஆம் தேதி நடைபெறும்

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் உலகளாவிய முன்னாள் மாணவர்கள் கூட்டம் 2025,  ஜனவரி 4, 2025 அன்று   சென்னையில் நடைபெறும்  என்று  தொழில்நுட்பக் கழகத்தின்  இயக்குநர் திருமதி ஜி.அகிலா அறிவித்தார். தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் அதிகாரப்பூர்வமான முன்னாள் மாணவர்கள்  சங்கத்தின் (பிராந்திய பொறியியல் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சங்கம்) முன்முயற்சியின் காரணமாக இந்த முக்கிய நிகழ்வு நடத்தப்பட உள்ளது. திருச்சியின் பிராந்திய பொறியியல் கல்லூரி/  தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் வளமான மாண்பைக் கொண்டாடுவதற்காக, உலகெங்கிலும் உள்ள திருச்சி தொழில்நுட்பக் கழகத்தின் முன்னாள் மாணவர்களை  இந்த நிகழ்வு  ஒன்றிணைக்கும்.  முந்தைய உலகளாவிய முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி, கடந்த 2020-ஆம் ஆண்டு நடைபெற்றது.930 க்கும் மேற்பட்ட தலைமை நிர்வாக அதிகாரிகள் மற்றும் 1300க்கும்  அதிகமான நிறுவனர்களை உள்ளடக்கிய சுமார் 48,000 முன்னாள் மாணவர்களின்   துடிப்பான இணைப்பை பறைசாற்றும் திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகம், திறமை மற்றும் புத்தாக்கத்தின் ஆற்றல் சக்தியாக விளங்குகிறது. உலகளாவிய முன்னாள் மாணவர்கள் சந்திப்பின் சிறப்பு விருந்தினராக  டாட்டா குழுமத்தின் தலைவர் திரு என். சந்திரசேகரன்,   கௌரவ விருந்தினராக மாநில அரசின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் டாக்டர் பழனிவேல் தியாகராஜன்  ஆகியோர் கலந்து கொள்வார்கள்.  அவர்களுடன் சந்திரயான் 3 திட்ட இயக்குநர் டாக்டர் வீரமுத்துவேல், கூகுள் நிறுவனத்தின்  செயற்கை நுண்ணறிவு பிரிவின் தலைமை வர்த்தக உத்தியாளர் திரு கோபி கல்லயில்  ஆகியோர்  உட்பட ஏராளமான முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டு, தங்களது சாதனைகளைப் பகிர்ந்து, ஒருங்கிணைப்புகளை ஊக்குவிப்பதுடன், தாக்கத்தை ஏற்படுத்தும் இணைப்புகளுக்கும் வித்திடுவார்கள். ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க மையத்தின் துவக்கம்2025 உலகளாவிய முன்னாள் மாணவர்கள் கூட்டத்தின் போது 20 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க மையம்  திறந்து வைக்கப்படும்.  தொழில்முனைவு மற்றும் பல்வேறு துறைகளில் ஆராய்ச்சிகளை ஊக்குவிப்பதற்கான லட்சிய நோக்கத்தின் குறிப்பிடத்தக்க முயற்சியாக இந்தத் துவக்கம் அமைந்துள்ளது.  வேளாண் தொழில்நுட்பம்,  நிதிநுட்பம்,  விண்வெளி  தொழில்நுட்பம்,  பசுமை தொழில்நுட்பம்,  குவாண்டம் கம்ப்யூட்டிங்,  செயற்கை நுண்ணறிவு/  இயந்திர கற்றல்  உள்ளிட்ட வளர்ந்து வரும் துறைகளில் இந்த மையம் கவனம் செலுத்தும்.  இரண்டாம் நிலை நகரங்களில் புத்தாக்கத்தை ஊக்குவிப்பதற்காக இந்த மையத்தில் 150 கோடி ரூபாய்  முதலீடு செய்யப்படும்.மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் முன்முயற்சிகளுக்கு அதிகாரம் அளித்தல்மாணவர் தத்தெடுப்பு திட்டம்,  பயண மானியங்கள்  மற்றும் நிதி உதவி உள்ளிட்ட தொழில்நுட்பக் கழகத்தின் தற்போதைய முன்முயற்சிகள், தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கின்றன.  முன்னாள் மாணவர்களால் முன்னெடுக்கப்படும்  பல்வேறு திட்டங்கள், தொழில்முனைவோரின் திறமையை ஊக்குவிக்கும் தேசிய தொழில்நுட்பக் கழகத்தின்  அர்ப்பணிப்பிற்குச் சான்றாக விளங்குகின்றன. தலைமை பேராசிரியர்கள் பதவிகளை அறிமுகப்படுத்துவது, உலகளாவிய ஆராய்ச்சி ஒருங்கிணைப்புகளை மேம்படுத்துவது போன்ற திட்டங்கள் சிறப்பான கல்வி மற்றும் நிலையான வளர்ச்சியை நோக்கிய திருச்சிதொழில்நுட்பக்  கழகத்தின்உறுதிபாட்டைவெளிப்படுத்துகின்றன.“மாணவர்களுக்கு முன்னாள் மாணவர்களின் வழிகாட்டுதல்,  தொழில்துறையால் முன்னெடுத்துச் செல்லப்படும் திட்டங்கள் மற்றும் வளமான புத்தொழில் சூழலியல்  முதலியவற்றிற்கான முறைசார் தளமாக ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க மையம் செயல்படும்.  ஆராய்ச்சிளை  பெருக்கி, தொழில்முனைவு திறமையை வளர்ப்பதற்கு  இது ஒரு முக்கிய முயற்சி”,  என்று திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குநர் டாக்டர் ஜி. அகிலா கூறினார்.“எங்களது பரந்த மற்றும் சாதனைகளுக்குப்  பெயர் பெற்ற முன்னாள் மாணவர்கள் இணைப்பு, வழிகாட்டுதல், நிதி உதவி அளித்தல் மற்றும் புத்தாக்கத்தின் களஞ்சியமாகத் திகழ்கிறது. கல்வி பயின்ற நிறுவனத்திற்கு ஆதரவளிக்கும் எங்களது கூட்டுஉறுதிப்பாட்டைஉலகளாவியமுன்னாள்மாணவர்கள் சந்திப்பு 2025 அடிக்கோடிட்டு காட்டுகிறது”,  என்று பிராந்திய பொறியியல் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் தலைவர் திரு கே. மகாலிங்கம் தெரிவித்தார்.திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தைப் பற்றிய குறிப்பு:

பிராந்திய பொறியியல் கல்லூரி என்று முன்னர் அழைக்கப்பட்ட திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகம், முக்கிய கல்வி நிறுவனங்களுள்  ஒன்றாகத் தொடர்ந்து நீடிக்கும் இந்தியாவின் தலைசிறந்த பொறியியல் கல்லூரிகளில் ஒன்றாகும். 17 துறைகளில், இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் படிப்புக்கான திட்டங்களை வழங்கும் இந்த நிறுவனம், உலகளாவிய புத்தாக்கம் மற்றும் தொழில்துறை தலைமையில் தொடர்ந்து குறிப்பிடத்தக்க  பங்களிப்பை வழங்குகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

யூடியூப் பார்த்து நாட்டுத் துப்பாக்கி தயாரித்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டார்

பாலகுரு தனது வீட்டின் அருகே உள்ள விளைநிலங்களில் அணில் வேட்டையாடுவதற்காக, யூடியூப் வீடியோக்களைப்

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி கேத் லேப் மற்றும் உயர் தொழில்நுட்ப சிடி ஸ்கேன் திறந்து வைக்கப்பட்டது

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.12.46 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கேத்

வீட்டுமனைப் பாட்டாக்களை மாண்புமிகு தமிழ்நாடுமுதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள்இன்று கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில்பெருநகர

கொல்கத்தாவில் வளர்ச்சித் திட்டங்களின் துவக்க விழாவில் பிரதமர்

ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களே, மத்திய அமைச்சர்கள் சாந்தனு தாக்கூர் அவர்களே,  சுகந்தா மஜும்தார் அவர்களே, மேற்கு வங்க எதிர்க்கட்சித் தலைவர்  சுபேந்து அதிகாரி அவர்களே, நாடாளுமன்ற உறுப்பினர் சமிக் பட்டாச்சார்யா அவர்களே, இதர மக்கள் பிரதிநிதிகளே, தாய்மார்களே, அன்பர்களே,இன்று, கொல்கத்தாவின் மண்ணிலிருந்து, மேற்கு வங்கம் மற்றும் கிழக்கு இந்தியாவிற்கான வளர்ச்சியின் புதிய அத்தியாயம் எழுதப்படுகிறது. சுமார் 18 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் சாலை, ரயில்வே மற்றும் துறைமுக உள்கட்டமைப்புத் திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன. இந்தத் திட்டங்கள் மேற்கு வங்கம் மற்றும் கிழக்கு இந்தியாவிற்கு புதிய உத்வேகத்தை அளிக்கும், வர்த்தகம் மற்றும் தொழில்துறையை மேம்படுத்தும், லட்சக் கணக்கான மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதுடன், அவர்களுக்குப் புதிய வாய்ப்புகளை வழங்கும். கரக்பூர்-மோரேகிராம் விரைவுச் சாலைப் பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, மேற்கு வங்கத்தின் பல பகுதிகளில் பொருளாதார நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும். துப்ராஜ்பூர் புறவழிச்சாலை மற்றும் காங்ஷாபதி மற்றும் ஷிலாபதி ஆறுகளின் மீது கட்டப்படும் பெரிய பாலங்கள், இணைப்பை மேலும் மேம்படுத்தும். இந்தத் திட்டங்களுக்காக மேற்கு வங்கம் மற்றும் கிழக்கு இந்திய மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.நண்பர்களே,இன்று, நாட்டில் ரயில்வேயை நவீனமயமாக்குவதற்கான ஒரு விரைவான பிரச்சாரம் நடந்து வருகிறது. இந்தப் பிரச்சாரத்தில் மேற்கு வங்கம் பின்தங்கியிருக்கக்கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்! எனவே, மேற்கு வங்கத்தின் ரயில்வே உள்கட்டமைப்பை விரிவுபடுத்த மத்திய அரசு வலுவான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இன்று, கலைகுண்டா மற்றும் கனிமஹுலி பிரிவுகளில் தானியங்கி தொகுதி சமிக்ஞை அமைப்பு நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது பரபரப்பான ரயில் பாதைகளின் திறனை அதிகரிக்கும், பயணத்தை பாதுகாப்பானதாக்கும், மேலும் பயணிகளுக்கு வேகத்தையும் வசதியையும் அதிகரிக்கும்.நண்பர்களே,இன்று, காமாக்யா குடி, அனாரா, தம்லுக், ஹால்டியா, பரபும் மற்றும் சியுரி ஆகிய ஆறு நிலையங்கள் அம்ரித் நிலையங்களாகப் புனரமைக்கப்பட்டு, திறந்து வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையங்களில் வங்கத்தின் சிறந்த கலாச்சாரம் இப்போது இன்னும் பிரகாசமாக மிளிர்கிறது. இங்கு மேலும் பல நிலையங்களும் மறுவடிவமைப்பு செய்யப்பட்டு வருகின்றன. புருலியா மற்றும் ஆனந்த் விஹார் முனையத்திற்கு இடையே ஒரு புதிய எக்ஸ்பிரஸ் ரயில் சேவையும் கொடியசைத்துத் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் சேவை மேற்கு வங்க மக்களுக்கு மட்டுமல்ல, ஜார்க்கண்ட், பீகார், உத்தரப்பிரதேசம் மற்றும் டெல்லி மக்களுக்கும் பயனளிக்கும்.சாலை மற்றும் ரயில் இணைப்பு போலவே, துறைமுகங்கள் மற்றும் நீர் போக்குவரத்தும் ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது. பல தசாப்தங்களாக, இந்த விஷயத்தில் கிழக்கு இந்தியாவின் ஆற்றல் புறக்கணிக்கப்பட்டது. ஆனால் இன்று, நீர்வழிகள் வர்த்தகம் மற்றும் தொழில்துறை முன்னேற்றத்திற்கான புதிய பாதைகளைத் திறக்கின்றன. இந்த திசையில், முக்கியமான துறைமுக உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன, நிறைவடைந்தவை, தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. கொல்கத்தா மற்றும் ஹால்டியா போன்ற துறைமுகங்கள் நீண்ட காலமாக கிழக்கு இந்தியாவில் முக்கிய வர்த்தக மையங்களாக உள்ளன. ஹால்டியா கப்பல்துறை வளாகம் இயந்திரமயமாக்கப்பட்டு வருகிறது. இது சரக்கு நடவடிக்கைகளை விரைவுபடுத்தும், துறைமுக திறனை அதிகரிக்கும் மற்றும் வர்த்தகத்திற்கான புதிய வசதிகளை உருவாக்கும். கொல்கத்தா கப்பல்துறை அமைப்புமுறையில் உள்ள பாஸ்குல் பாலத்தின் புதுப்பித்தல் பணியும் நடைபெற்று வருகிறது. கிதர்பூர் கப்பல்துறையில் சரக்கு கையாளும் திறனை அதிகரிப்பதிலும் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். இந்த திட்டங்கள் அனைத்தும் கிழக்கு இந்தியாவின் தளவாட அமைப்பை வலுப்படுத்தும்.நண்பர்களே,சாலைகள், ரயில்வே மற்றும் துறைமுகங்கள் தொடர்பான இந்தப் புதிய திட்டங்கள் மேற்கு வங்கத்தின் நவீன எதிர்காலத்திற்கான புதிய பாதைகளைத் திறக்கின்றன. விவசாயிகள், வர்த்தகர்கள், தொழில்முனைவோர், மாணவர்கள் அனைவரும் பயனடைவார்கள். சுற்றுலா போன்ற துறைகளிலும் புதிய வாய்ப்புகள் உருவாகும். உள்ளூர் தொழில்கள் மற்றும் சேவைகள் வேகம் பெறும். இந்தியாவை எப்போதும் வழிநடத்தி வரும் மேற்கு வங்கம், ‘வளர்ச்சியடைந்த மேற்கு வங்கமாக’ மீண்டும் அந்த பெருமையை அடைய வேண்டும் என்பதே எங்கள் உறுதி. வலுவான இணைப்பு மற்றும் நவீன உள்கட்டமைப்பு ஒரு வளர்ந்த மாநிலத்தின் அடித்தளத்தை உருவாக்கும் என்று நான் முழுமையாக நம்புகிறேன். இந்த விருப்பத்துடன், இந்த வளர்ச்சித் திட்டங்களுக்காக உங்கள் அனைவருக்கும் மீண்டும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்போது, இந்த அதிகாரப்பூர்வ நிகழ்ச்சி முடிவடைந்தவுடன், மாநில மக்கள்  கூடியிருக்கும் திறந்தவெளி மைதானத்திற்குச் செல்வேன். மேற்கு வங்க மக்களைச் சந்தித்து அவர்களிடையே மிக முக்கியமான பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்கும் பாக்கியம் எனக்குக் கிடைக்கும். 

பி.கே.சேகர்பாபு திரு.வி.க.நகர் மண்டலத்தில் கட்டப்பட்ட பல்நோக்கு மையக் கட்டடத்தில் உள்ள நியாய விலைக் கடையினைப் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்வழிகாட்டுதலின்படி,இன்று மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும்,சென்னைப்

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் உலகளாவிய முன்னாள் மாணவர்கள் கூட்டம் 2025, ஜனவரி 4-ஆம் தேதி நடைபெறும்

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube