மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் இன்று சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீபாவளி தீக்காய சிறப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்து அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.அதன் பிறகு இன்று பணியில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவம் சார்ந்த பணியாளர்களுக்கு இனிப்பு வழங்கி பண்டிகை நாளிலும் பணி செய்வதை ஊக்குவிக்கும் வகையில் பாராட்டு தெரிவித்தார். இந்நிகழ்வில் கீழ்ப்பாக்கம் மருத்து கல்லூரி முதல்வர் முத்துச்செல்வன், தீக்காய பிரிவு துறைத்தலைவர் நெல்லையப்பர் ,மருத்துவமனை கண்காணிப்பாளர் ஆயிஷா நிலைய மருத்துவ அலுவலர் வாணி மற்றும் செவிலியர்கள் மருத்துவம் சார்ந்த பணியாளர்கள் உடன் இருந்தனர்.