தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விமான கட்டணங்கள் பலமடங்கு.. சென்னையில் இருந்து மதுரைக்கு மக்கள் பெரும் அதிர்ச்சி…!

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு மக்கள் தீபாவளி பண்டிகையை விமர்சையாக கொண்டாட ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். தீபாவளி பண்டிகை நாளில் புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து, சொந்தபந்தங்களுடன் இணைந்து ஒருவருக்கொரு இனிப்புகளை வழங்கி வாழ்த்து சொல்வது வழக்கம்.

மக்கள் புது துணிகளை வாங்க கடைகளில் குவிந்து வருவதால் துணிக்கடைகள் நிரம்பி வழிகின்றன. இதேபோல் இனிப்பு மற்றும் பட்டாசு கடைகளும் மக்கள் கூட்டத்தால் அலைமோதி வருகிறது. தீபாவளி பண்டிகை வியாழக்கிழமையில் வருவதால் தீபவாளிக்கு மறு நாளான வெள்ளிக்கிழமையும் தமிழக அரசு விடுமுறை

இதனால் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 4 நாட்கள் விடுமறை கிடைத்துள்ளது. இதன் காரணமாக ஏராளமான மக்கள் சொந்த ஊர் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தீபாவளி பண்டிகை முன்னிட்டு சென்னையில் உள்ள மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வது வாடிக்கை. சொந்த ஊர் செல்லும் மக்களுக்கு வசதியாக தமிழக அரசு, ஏராளமான சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது.

இதேபோல் தெற்கு ரயில்வே மட்டுமின்றி ஒட்டு மொத்த இந்திய ரயில்வேயும் ஏராளமான சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. தெற்கு ரயில்வே சார்பில் தென் மாவட்டங்கள் மற்றும் மற்ற மாநிலங்களுக்கு சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏராளமான மக்கள் விமானங்களில் செல்லவும் திட்டமிட்டுள்ளனர்.

நேர சேமிப்பை கணக்கில் கொண்டு மக்கள் விமானங்களில் செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் விமான கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. தீபாவளி பண்டிகையையொட்டி விடுமுறையைத் தொடர்ந்து, தென்மாவட்டங்களுக்கான விமான கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு சாதாரண கட்டணம் ரூ.4,109, தற்போது, ஆனால் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரூ.8,976 முதல் ரூ.13,317 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

இதேபோல் சென்னையில் இருந்து மதுரைக்கு சாதாரண கட்டணம் ரூ.4,300 வசூலிக்கப்படுகிறது. ஆனால் தற்போது, ரூ.11,749 முதல் ரூ.17,745 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. சராசரியாக அனைத்து விமான நிறுவனங்களின் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.