தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம்… மாணவர்களின் ஆட்டம், பாட்டம் – கலை கட்டிய கலைத்திருவிழா…

பள்ளியில் கலைத்திருவிழா; மாணவர்கள் அசத்தல் தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளியில் கலைத்திருவிழா போட்டிகளில், மாணவர்கள் திறமையை வெளிப்படுத்தினர்.

பள்ளி கல்வித்துறை சார்பில், 2024–25ம் ஆண்டின் கல்வி சாரா செயல்பாடுகளில், பள்ளி அளவிலான கலைத்திருவிழா போட்டிகளாக நடத்தப்பட்டு மாணவர்களிடன் தனித்திறமை வெளிக்கொண்டு வரப்படுகிறது.

மாணவர்களிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் வளப்படுத்துதல் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன், சூழல் பாதுகாப்பு அனைவரின் பொறுப்பு என்ற மையக்கருத்தின் அடிப்படையில் அனைத்துப் போட்டிகளும் நடைபெறுகிறது.

அதில்,தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளியில், கலைத்திருவிழா போட்டிகள் நடைபெற்றன. தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை வகித்தார்.பிரிவு, ஒன்றில், ஒன்றாம் வகுப்பு, இரண்டாம் வகுப்புக்கும், பிரிவு இரண்டில், 3,4,5 வகுப்புகளுக்கும்; பிரிவு-, மூன்றில், 6,7,8 வகுப்புகள் என போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில், 1, 2 வகுப்புகளுக்கு ஒப்புவித்தல், கதை கூறுதல், வண்ணம் தீட்டுதல், மாறுவேடம், பாடல்கள் என ஐந்து போட்டிகளும், 3,4,5 வகுப்புகளுக்கு பேச்சு, திருக்குறள், மெல்லிசை, தேசபக்திப் பாடல்கள், களிமண் பொம்மைகள், மாறுவேடம், நாட்டுப்புற நடனம், பரத நாட்டியம் என எட்டு போட்டிகளும் நடைபெற்றன.

மேலும், 6,7,8ம் வகுப்புகளுக்கு ஓவியம், களிமண் சுதை வேலைப்பாடு, மணல் சிற்பம், செவ்வியல் இசை, வில்லுப்பாட்டு, நாட்டுப்புறப்பாடல், கிராமிய நடனம், பரத நாட்டியம், தனி நடிப்பு, நகைச்சுவை, பலகுரல் பேச்சு என 11 போட்டிகளும் நடைபெற்றன.

சிறப்பு கவனம் தேவைப்படும் மாணவர்களுக்கு ஓவியம், வண்ணம் தீட்டுதல், மாறுவேடம், களிமண் பொம்மைகள், களிமண் சுதை வேலைப்பாடுகள் மணல் சிற்பம் போன்ற போட்டிகள் நடைபெறுகிறது.

ஆசிரியர்கள் முத்துலெட்சுமி, முத்துமீனாள் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளியில் கலைத்திருவிழா போட்டிகளில், மாணவர்கள் திறமையை வெளிப்படுத்தினர்.தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை வகித்தார்.ஆசிரியர்கள் முத்துலெட்சுமி, முத்துமீனாள் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தேவிகுளம் சட்டமன்ற தொகுதி, காந்தலூர் பஞ்சாயத்து வார்டு 11 திண்டுகொம்பில், வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும், கழக வெற்றி வேட்பாளர் திரு மகேந்திரன் அவர்களை ஆதரித்து,

கேரள மாநில உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளரும், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக

ராமநாதபுரம் அருகே கீழக்கரையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5

12.12.2025. கடைசி நாள்

இந்திய வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் Junior Executive வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.40,400