நீட்,நெக்ஸ்ட் தேர்வும் தேவையில்லை : முதல்வர் மு.க. ஸ்டாலின் !

சென்னை:
நீட் தேர்வைப் போன்றே, நெக்ஸ்ட் தேர்வையும் நாங்கள் எதிர்ப்போம் என்ன முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் தமிழ்நாடு மாநில 4-ஆவது மாநாடு, 20-ஆம் ஆண்டு தொடக்க விழா, மற்றும் TNMSA – TNDSA கருத்தரங்கில் காணொலி வாயிலாக உரையாற்றிய போது சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெறும் தமிழ்நாடு மாநில 4-ஆவது மாநாடு, 20-ஆம் ஆண்டு தொடக்க விழா மற்றும் TNMSA – TNDSA கருத்தரங்கில் பங்கேற்றிருக்கும் அனைவருக்கும் வணக்கம்! “ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்” என்றார் பேரறிஞர் அண்ணா. நோயால் உடலும் உள்ளமும் துவண்டு போகும் ஏழைகளுக்கு உரிய சிகிச்சை கொடுத்து, அவர்களைக் குணப்படுத்தி, அவர்களின் முகத்தில் புன்னகையை வர வைப்பவர்கள் – டாக்டர்கள்!

மனித உயிரை காக்கும் புனிதமான பணியை, சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தைச் சேர்ந்த ஜி.ஆர்.ரவீந்திரநாத் உள்ளிட்ட அனைத்து டாக்டர்களும் மேற்கொண்டிருக்கிறீர்கள். 20 ஆண்டுகாலமாக இந்தச் சங்கத்தை சிறப்பாக நடத்தி, அதன் 4-ஆவது மாநாட்டை எழுச்சியோடும் நடத்தி வருவதை பாராட்டுகிறேன்.

மனித உயிரை காப்பாற்றுவது என்பது, உங்களின் தொழில் மட்டுமல்ல; சமுதாயத்திற்கு நீங்கள் செய்கிற மிகப் பெரிய சேவையாகும்.

மருத்துவத் துறையில் கடந்த 10 ஆண்டுகளாக சமூகநீதிக்கு எதிரான சிந்தனைகளையும் செயல்பாடுகளையும் எதிர்கொள்கிறோம். இந்தச் சவால்கள் அனைத்தும், தமிழ்நாட்டில் சிறப்பாக இருக்கும் மருத்துவக் கட்டமைப்புகளை சிதைப்பதோடு, மருத்துவம் படித்து, டாக்டர்களாகி சமுதாயத்திற்குச் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று நினைக்கும் மாணவர்களின் உணர்வுகளையும், கனவுகளையும் பாழாக்குகிறது.

இந்திய மாநிலங்களில் மிகச்சிறப்பான மருத்துவக் கட்டமைப்பை கொண்டுள்ள மாநிலம், தமிழ்நாடு! சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் பன்னோக்கு மருத்துவமனைகள், ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் தலைமை மருத்துவமனைகள், நகரங்கள் எல்லாவற்றிலும் அரசு பொது மருத்துவமனைகள், கிராமப்புறங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் என்று அனைத்து மக்களுக்கும் உரிய நேரத்தில் உடனடி சிகிச்சை அளிப்பதற்கான கட்டமைப்புகளை, அரை நூற்றாண்டு காலத்திற்கு முன்பே கருணாநிதி உருவாக்கினார்.

முதுநிலை மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயத்து மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகம் உச்சநீதிமன்றம் வரைக்கும் சென்று வாதாடியபோது, சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்களான நீங்கள் அனைவரும் ஆதரவாக நின்றீர்கள். அந்தச் சட்டப்போராட்டத்தில் வெற்றி பெற்றோம். அதனால், தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களில் வாழுகிற இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான மருத்துவப் படிப்பை உறுதி செய்தோம்.

பொது நுழைவுத்தேர்வு முறையை 2007-ஆம் ஆண்டு முழுமையாக ரத்து செய்து, அதற்கான சட்ட ஏற்பையும் குடியரசுத் தலைவர் மூலமாகப் பெற்றவர் கருணாநிதி. டாக்டர் ஆனந்தகிருஷ்ணன் தலைமையிலான கமிட்டி மூலமாக, உரிய தரவுகளைச் சேகரித்து, கருணாநிதி தலைமையிலான அரசு எடுத்த நடவடிக்கைகளின் காரணமாகத்தான், +2 மதிப்பெண் அடிப்படையில், கிராமப்புற – ஏழை எளிய – பின்தங்கிய – ஒடுக்கப்பட்ட குடும்பங்களை சேர்ந்த பிள்ளைகளும் டாக்டர் ஆக முடியும் என்ற நிலை உருவானது.

மக்கள் நல்வாழ்வுத்துறையில், உங்களில் ஒருவனான என்னுடைய தலைமையிலான திராவிட மாடல் அரசின் நடைமுறைகளை, இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்கள் பின்பற்றினால், சமூக முன்னேற்றத்தை எளிதாக்கலாம் என்று அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டு, “தகுதி மற்றும் சமூகத் தாக்கங்கள் பற்றிய பரந்த புரிதல் தமிழ்நாடு அரசுக்கு உள்ளது“ என்றும் எழுதியிருக்கிறார்கள்.

கடந்த இரண்டரை ஆண்டுகளில் தமிழக அரசால் நடைமுறைபடுத்தப்பட்ட மக்களுக்கான மருத்துவ நலத்திட்டங்கள்.

* ’மக்களைத் தேடி மருத்துவம்‘,
* ’இன்னுயிர் காப்போம் – நம்மை காக்கும் 48’,
* ’புதுப்பிக்கப்பட்ட வருமுன் காப்போம் திட்டம்‘,
* ’விரிவாக்கப்பட்ட முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்‘ – உள்ளிட்ட பல திட்டங்கள் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

நாம் ஆட்சி பொறுப்பெற்றவுடன், கொரோனா இரண்டாவது அலை மோசமாக நிலையில் இருந்தது. அப்போது மக்களின் மனநிலை எவ்வாறு இருந்தது‘; ஆனால் நாம் ஆட்சிக்கு வந்து எடுத்த சுகாதார நடவடிக்கைகளால் மக்கள் கொஞ்சம் நாளிலேயே எவ்வளவு நம்பிக்கையோடு வாழ தொடங்கினார்கள் என நாம் நன்கு அறிவோம்.

உலகளவில் அறிவியல் துறையில் நடக்கும் புதிய ஆராய்ச்சிகளையும் – மருத்துவத்துறையில் ஏற்படுகிற வளர்ச்சிகளையும் உடனுக்குடன் கவனித்து, தமிழ்நாட்டில் செயல்படுத்துவதன் விளைவாகத்தான் பன்னோக்கு மருத்துவமனைகள், சிறப்பு நோக்கு மருத்துவமனைகள் தமிழ்நாட்டில் சிறப்பான சிகிச்சையை அளிக்கிறது.

தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டிருக்கும் மருத்துவக் கட்டமைப்புகளை சிதைக்கும் வகையில், முதலில் நீட் தேர்வு திணிக்கப்பட்டது. மாணவி அனிதா தொடங்கி மாணவர் ஜெகதீஸ்வரன் வரை பல பேரின் உயிரை நீட் என்கிற கொடுவாள் பறித்தது. நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான சட்டப் போராட்டத்தில் நாம் உறுதியாகயுள்ளோம். நாம் நீட்டை எதிர்க்கும் நேரத்தில், நெக்ஸ்ட் தேர்வு என்று அடுத்த ஆபத்து நுழைகிறது. அதையும் முழுவீச்சில் எதிர்க்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம்.

நீட் தேர்வில் இருந்து முழுமையான விலக்கு, மருத்துவக் கல்வியில் மாநிலத்தின் உரிமை ஆகியவற்றோடு, கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சியும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். இந்த உரிமைப் போரில் நாம் நிச்சயம் வெல்வோம் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

நீட்,நெக்ஸ்ட் தேர்வும் தேவையில்லை : முதல்வர் மு.க. ஸ்டாலின் !

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை