தேனி:
இயந்திர வாடகை, கூலி உள்ளிட்ட செலவுகள் இருமடங்காக உயர்ந்துள்ளதால் நெல்கொள்முதல் விலையை கிலோவிற்கு ரூ.35-க்கு மேல் உயர்த்தி வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இது தொடர்பாக பேசிய தேனி மாவட்ட விவசாயிகள், பெரியகுளம் மற்றும் ஆண்டிப்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் நெல்லை அரசே நேரில் விரைவாகக் கொள்முதல் செய்ய வேண்டும். உரம் விலை அதிகரிப்பு மற்றும் கூலி உயர்வைக் கருத்தில் கொண்டு நெல் கொள்முதல் விலையைச் சன்ன ரகத்திற்கு ரூ.2,750-க்கு மேல் கூடுதல் விலையாக குவிண்டாலுக்கு ரூ.3,500 வரை உயர்த்தி வழங்க வேண்டும்.
உரங்கள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் ஆள் கூலி பல மடங்கு கூடிவிட்டன. எனவே அரசு தற்போது வழங்கும் கொள்முதல் விலை போதவில்லை. தற்போது அளிக்கப்படும் கொள்முதல் விலை, எங்களின் தற்போதைய செலவுகளுக்கு ஈடு கொடுக்கவில்லை.
தற்போதைய அரசு விலை சன்ன ரகம் கிலோ ரூ.27.50-க்கும், ஒரு குவிண்டால் ரூ.2,750 என்ற கணக்கில் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அதே போல பொது ரக நெல்லின் தற்போதைய அரசு கொள்முதல் விலை கிலோ ரூ.26-க்கும், ஒரு குவிண்டால் ரூ.2,600-ஆகவும் உள்ளது. விவசாயிகள் கோரும் விலை கிலோவுக்கு ரூ.35 அதாவது ஒரு குவிண்டாலுக்கு ரூ.3,500 வழங்க வேண்டும் என விசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியாளர்களை தாக்கிய தவெக எம்எல்ஏ கபில் மீது 21 நாட்களுக்குப் பிறகு வழக்குப்பதிவு
ராணிப்பேட்டை:ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் யூடியூபர் மற்றும் செய்தியாளர்களைத் தாக்கியதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில்,






