பயன்படுத்துவதற்குத் தயாராக உள்ள இட்லி மாவு, தோசை மாவு மற்றும் வடை மாவுக்கான இந்திய தர நிர்ணய விவரக்குறிப்பு கலந்துரையாடல்…

இந்திய தர நிர்ணய அமைவனத்தின் சென்னை கிளை அலுவலகம் சார்பில், “பயன்படுத்துவதற்குத் தயாராக உள்ள ( ready to use ) இட்லி மாவு, தோசை மாவு மற்றும் வடை மாவுக்கான இந்திய தர நிர்ணய விவரக்குறிப்பு” என்பது குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னையில் இன்று (25-04-2024) நடைபெற்றது. பிஐஎஸ் சென்னை கிளை அலுவலகத்தின் தலைவர் ஜி. பவானி, இந்நிகழ்ச்சியின் நோக்கங்களை விளக்கிக் கூறினார். ஒவ்வொரு மாதமும் தொழில்துறையின் நலனுக்காக “மானக் மந்தன்” என்ற தலைப்பில் புதிய தொடர் கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார். தொழில்துறை மற்றும் வர்த்தக அமைப்புகள், வர்த்தக சபைகள், தொழில் சங்கங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், அரசுத் துறைகள், ஒழுங்குமுறை அமைப்புகள், ஆய்வகங்கள், சிவில் சமூகக் குழுக்கள் மற்றும் கல்வியாளர்களுக்கு புதிய தரநிலைகளை அறிமுகப்படுத்தவும், உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு முக்கியமான தகவல்களைப் பகிரவும் இதன் மூலம் திட்டமிடப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். பாரம்பரிய இட்லி தயாரிப்பு, தோசை மாவு தயாரிப்பு மற்றும் வடை மாவு தயாரிப்பது மற்றும் அவற்றுக்கான தரநிலைகளை எடுத்துரைத்தார். பிஐஎஸ்-ஸின் உணவு மற்றும் வேளாண்துறை விஞ்ஞானி லவிகா சிங் பேசுகையில், இட்லி மாவு, தோசை மாவு மற்றும் வடை மாவின் கலவை, செயல் முறைகள், பேக்கேஜிங் தேவைகள் மற்றும் தரக் கட்டுப்பாட்டு ஆகியவை குறித்து எடுத்துரைத்தார். இந்த தரநிலைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம், உற்பத்தியாளர்கள் நிலையான தரம் மற்றும் பாதுகாப்பை உறுதிசெய்து, அதன் மூலம் நுகர்வோர் நம்பிக்கை மற்றும் திருப்தியை மேம்படுத்த முடியும். என்று அவர் கூறினார். தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழகத்தின் பொது மேலாளர் செல்வி பி எஸ் விஜயலட்சுமி தலைமை விருந்தினராகப் பங்கேற்றார். அவர் தனது உரையில் இந்த தரநிலைகள் நுகர்வோரின் ஆரோக்கியம், திருப்தி மற்றும் கலாச்சார பாரம்பரியத்திற்கு முன்னுரிமை அளிப்பதாகத் தெரிவித்தார். தரத்தின் தேவைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், இந்திய தர நிர்ணய அமைவனத்தின் மூலம் இத்தகைய கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தப்படுவது பாராட்டுக்குறியது என்று அவர் கூறினார். முன்னதாக, விஞ்ஞானி திரு தினேஷ் ராஜகோபாலன், பிஐஎஸ்-ஸின் செயல்பாடுகள் மற்றும புதிய முயற்சிகள் பற்றி விளக்கினார். நிகழ்ச்சியில் மாவு தொழில்துறையைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.