இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான். முன்னாள் கிரிக்கெட் வீரரான இவர் கடந்த 2018-ம் ஆண்டு புஷ்ரா பீபி என்பவரை மறுமணம் செய்து கொண்டார். இந்த மறுமணத்தில் மத விதிமீறல் நடந்ததாக புகார் எழுந்தது. அதாவது முஸ்லிம் மத சட்டப்படி ஒரு பெண்ணின் கணவர் இறந்தாலோ அல்லது அவர் திருமண முறிவு ஏற்பட்டாலோ, அந்த பெண் மறுமணம் செய்து கொள்ள 3 மாத காலம் காத்திருக்க வேண்டும். இந்த காலத்தை இத்தாத் காலம் என்பார்கள்.
ஆனால் இம்ரான்கான் புஷ்ரா பீபியை இத்தாத் காலம் முடியும் முன்பே மறுமணம் செய்து கொண்டதாக இப்போது தகவல் வெளியாகி உள்ளது. பொது வெளியில் இந்த தகவல் பரவியதால், இவர்களுக்கு நடந்த திருமணம் மத விதி மீறல் எனவும் இது தொடர்பாக அவர்கள் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோர்ட்டில் மனு செய்யப்பட்டது.
இந்த மனுமீதான விசாரணை கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்நிலையில் இது தொடர்பாக பாகிஸ்தான் மதகுரு முப்தி முகமது சயீத் கூறியதாவது:-
பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் திருமணம் இத்தாத் காலத்தில் தான் நடந்தது. இத்திருமணத்தை நடத்தி வைக்க என்னை இம்ரான்கான் லாகூர் அழைத்து சென்றார்.அங்கிருந்த பெண் ஒருவர், திருமணத்திற்கான அனைத்து நிபந்தனைகளும் சரியாக உள்ளது எனக்கூறியதால் நான் திருமணத்தை நடத்தி வைத்தேன் என்றார்.
தற்போது இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளதால் இம்ரான்கானுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் ஏராளமான வாகனங்கள் முக்கிய சாலைகள் மற்றும் தெருக்களில் நிறுத்தப்படுவதால் பொது மக்கள் நடந்து செல்ல கூட முடியாமல் சிரமத்துக்கு ஆளாகின்றனர். அரசு இந்த பிரச்சினைக்கு மல்டி லெவல் பார்க்கிங் போன்ற பல்வேறு வசதிகளை கொண்டு வந்தாலும் தெருக்களில் நிறுத்தப்படும் வாகனப் பிரச்சினைக்கு தீர்வு என்பது எப்போது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!
இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்






