புதுச்சேரி முன்னாள் அமைச்சர் ப.கண்ணன் காலமானார்…

புதுச்சேரி:
புதுவை முன்னாள் அமைச்சர் ப.கண்ணன் காலமானார். அவருக்கு வயது 74. புதுவை வைசியாள் வீதியில் உள்ள அவரின் இல்லத்துக்கு கொண்டு வரப்பட்ட அவரது உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

புதுவை அரசியலில் முக்கிய தலைவராகத் திகழ்ந்தவர் ப.கண்ணன். சட்ட பேரவைத் தலைவர், அமைச்சர், மாநிலங்களவை உறுப்பினர் என பல்வேறு பதவிகளை வகித்தார். 2021 சட்டமன்ற தேர்தலின்போது பாஜகவிலிருந்த அவர், அரசியலில் இருந்து முழுமையாக விலகினார். மணிப்பூர் கலவரத்தின்போது பாஜகவிலிருந்தும் விலகுவதாக தெரிவித்தார். கடந்த 1-ம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக ப.கண்ணன் மூலக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்றைய தினம் அவருக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டு சுவாசக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். காங்கிரஸ், தமாகா, அதிமுக, பாஜக: மறைந்த ப.கண்ணனுக்கு வயது 74. தனது இளமை பருவத்திலிருந்து காங்கிரஸ் கட்சியில் நீண்டகாலமாக ப.கண்ணன் பணியாற்றினார்.

மறைந்த ப.கண்ணன் உடல் நேற்று இரவு புதுவை வைசியாள் வீதியில் உள்ள அவரின் இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டது. அவரது உடலுக்கு மதிமுக பொது செயலாளர் வை.கோ அஞ்சலி செலுத்தினார். புதுவை மாநிலம் முழுவதும் உள்ள மறைந்த ப.கண்ணனின் ஆதரவாளர்கள் மற்றும் பொது மக்கள் அவரது வீட்டில் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தேவிகுளம் சட்டமன்ற தொகுதி, காந்தலூர் பஞ்சாயத்து வார்டு 11 திண்டுகொம்பில், வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும், கழக வெற்றி வேட்பாளர் திரு மகேந்திரன் அவர்களை ஆதரித்து,

கேரள மாநில உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளரும், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக

ராமநாதபுரம் அருகே கீழக்கரையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5

12.12.2025. கடைசி நாள்

இந்திய வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் Junior Executive வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.40,400