பெசன்ட் நகரில் அன்னை வேளாங்கண்ணி ஆலய ஆடம்பர தேர்பவனி

சென்னை:
சென்னை பெசன்ட் நகரில் அன்னை வேளாங்கண்ணி தேர் திருவிழா கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அருள் தந்தை வின்சென்ட் சின்னதுரை தலைமையில் சென்னை மயிலை மறை மாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோனிசாமி கொடி எற்றிவைத்தார். விழாவை முன்னிட்டு தினமும் திருப்பலிகள் நடைபெற்று வருகிறது.
விழாவின் 10ம் நாள் முக்கிய நிகழ்வான இன்று மாலை 5.30 மணிக்கு ஜெபமாலை, நவநாள் செபம், ஆடம்பர கூட்டுத் திருப்பலியும், அதனை தொடர்ந்து அன்னையின் ஆடம்பர தேர்பவனி ஆலய பங்கு தந்தை வின்சென்ட் சின்னதுரை முன்னிலையில், சென்னை மயிலை உயர்மறை மாவட்ட பேராயர் மேதகு டாக்டர். ஜார்ஜ் அந்தோணிசாமி தலைமையில் நடைபெற உள்ளது.
இதில் சென்னையில் உள்ள அனைத்து ஆலய பங்கு தந்தையர்கள் பங்கேற்கின்றனர். உதவி பங்கு தந்தையர்கள் பி.ஏ.பிரான்சிஸ் சேவியர், அலெக்ஸ் சகாயராஜ், மைக்கேல் எஸ்.டி.சி., அன்பியங்கள், கார்மேல், ஒளி உதயம் அருட்சகோதரிகள் மற்றும் பங்கு மக்கள் அன்னையின் ஆடம்பர தேர்பவனி விழாவை சிறப்பிக்கின்றனர்.
இந்த விழாவில் சென்னை மற்றும் பிற மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பெசன் நகரில் திரண்டு வந்த வண்ணம் உள்ளனர். பக்தர்களின் பாதுகாப்புக்காக சென்னை மாநகர காவல்துறையினர் உயர் கோபுரங்கள் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். போக்குவரத்து காவலர்களும் போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை சென்னை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது. விழாவை முன்னிட்டு சென்னை மாநகர போக்குவரத்து துறை சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது.
விழாவின் நிறைவு நாளான நாளை அதிகாலை 2 மணி முதல் அருட் தந்தை ஜார்ஜ் டவுன் பங்குத்தநதை மரிய ஜான் போஸ்கோ திருப்பலியும், எஸ்.டி.சி. ஆந்திரா எஸ்.டி.சி. நிர்வாகத்தந்தை பாக்கியராஜ் 3.30 மணிக்கு திருப்பலியும், மணலி பங்குத்தந்தை ஏ.அமல்ராஜ் காலை 5 மணிக்கு திருப்பலியும், இருதய குருடம் அருட்தந்தை பீட்டர் சூசைமாணிக்கம் காலை 6.30 மணிக்கு திருப்பலியும், இல்ல குருக்கள் மற்றும் அருட்சகோதரர்கள் அதிபர் அருட்தந்தை பொனிபெஸ் காலை 7.45 மணிக்கு ஆங்கிலத்தில் திருப்பலியும், கீழ்ப்பாக்கம் பங்குதந்தை அருளப்பா காலை 9 மணிக்கு திருப்பலியும், பூந்தமல்லி சி.எம்.ஐ. சாந்தோம் பவன் அதிபர் செ.பீ. டேவிட் நண்பகல் 12 மணிக்கு மலையாளத்தில் திருப்பலியும், பிற்பகல் 2.30 மணிக்கு மணலி புதுநகர் பங்குத்தந்தை எச்.தங்ககுமார் திருப்பலியும், மாலை 5.30 மணிக்கு ஜெபமாலை, நவநாள், ஜெபம், நன்றித் திருப்பலியும் தொடர்ந்து அன்னைக்கு முடிசூட்டு விழா, அன்னையின் திருக்கொடியிறக்கம் ஆகியவை திண்டுக்கல் மறைமாவட்ட ஆயர் தாமஸ் பால்சாமி தலைமையில் நடக்கிறது. இதில் பங்குப் பேரவை அன்பியங்கள், தன்னார்வத் தொண்டர்கள் மற்றும் அருட்சஅகதமகஙள பங்கேற்கின்றனர்.
இறுதியாக கொடி இறக்கத்துடன் விழா இனிதே நிறைவடைகிறது.

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச