பெற்ற மகன்களை எரித்து கொன்ற தாய் – குமரியில் அதிர்ச்சி சம்பவம்.!

குமரி மாவட்டம் திருவட்டாரை அடுத்துள்ள புத்தன்வீட்டுவிளையை சேர்ந்தவர் ஏசுதாஸ் (45). சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஷீபா (40). இவர்களுக்கு கெபின் (15), கிஷான் (7) என்ற 2 மகன்கள் உள்ளனர். இருவரும் பள்ளியில் படித்து வருகின்றனர். இவர்களுக்கு பக்கவாத நோய் பாதிப்பினால் காலை சற்று சாய்த்தவாறு செல்வர். இதற்காக பல்வேறு இடங்களில் சிகிச்சை அளிக்கப்பட்டும் சரியாகவில்லை. இதனால், கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மீண்டும் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏசுதாஸ் வீட்டைவிட்டு வெளியே சென்றுவிட்டார். அதன் பின்பு சிறிது நேரம் கழித்து திரும்பி வீட்டுக்கு வந்தார். ஆனால், மனைவி கதவை உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டுக்கொண்டு கதவை திறக்கவில்லை. இந்நிலையில் நேற்று அதிகாலையில் திடீரென்று அலறல் சத்தம் கேட்டுள்ளது. அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது படுக்கை அறையில் 3 பேரும் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். இதனையடுத்து, 3 பேரையும் மீட்டு தக்கலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அடுத்தடுத்து 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப தகராறில் 2 மகன்களை தீ வைத்து எரித்துக் கொலை செய்துவிட்டு தாயும் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை