இந்தியாவில் உள்ள அனைத்து தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் காலியாக உள்ள எழுத்தர் பணிக்கு பொதுத் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் 2024-25ம் ஆண்டுகளில் காலியாக உள்ள எழுத்தர் (Clerks) பணிகளுக்கு ஒரே பொதுத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.முதல் நிலை (Preliminary), பிரதான தேர்வு (Main) என ஆன்லைனில் இரு கட்டங்களாக தேர்வு நடைபெறும். பிரதான ஆன்லைன் தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு சம்பந்தப்பட்ட வங்கிகள் நேர்முகத் தேர்வை நடத்தும். தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை, முதல் நிலை தேர்வுக்கான கட்டணம், தேர்வு மைய விவரங்கள், தேர்வு முறை உள்ளிட்ட விவரங்களுக்கு www.ibps.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 21.07.2023.