இயேசு கிறிஸ்துவின் விடுதலை தத்துவத்தை போதிக்க வேண்டிய திருச்சபையாளர்கள் அன்றைக்கு இருந்த வேத போதகர்களை போல கிறித்தவ மக்களுக்கு இப்போது இருப்பவர்கள் பகுத்தறிவை போதிக்க வில்லை.
போப்பாண்டவரின் அறிவுரைகளை திருச்சபையாளர்கள் கேட்பதில்லை இறை மக்களுக்கு திருச்சபையில் எந்த இறை மக்களுக்கும் முக்கியத்துவம் தருவதில்லை வர வர இறை மக்களுக்கு மூட பழக்க வழக்கம் திருச்சபைக்குள் அதிகமாகிக்கொண்டே வருகிறது.
இது மீண்டும் மீண்டும் கிறிஸ்தவர்களை அரசியலாக விடாமல் தடுத்து வருவதை மக்கள் மேம்பாட்டு கழகம் வன்மையாக கண்டிக்கிறது. இதனால் கிறிஸ்தவர்கள் சமூகநீதி பற்றிய சிந்தனை இல்லாமல் இருப்பது வேதனைக்குரியதாகும். சாதி ஏற்ற தாழ்வை சனாதன மதத்தை போதிக்கும் மதத்தை விட மிக மோசமாக சாதி பிரிவினையை கிறிஸ்தவ சபைகள் ஊக்குவிக்கிறது. அப்படி ஊக்குவிப்பவர்களாக கிறிஸ்தவமத போதகர்களிருப்பது வேதனைக்குரியது இது மக்ளுக்கு செய்யும் துரோகமாகும்.
கிறிஸ்துவின் வாழ்க்கையே அன்றைய ஆட்சியாளர்களை கண்டித்து மக்களின் நலனில் அக்கறை கொண்டு உயிரை தியாகம் செய்த மகத்தான போராளி இயேசு கிறிஸ்து என்பது தான் வரலாறு. அவரின் உண்மையான அரசியலை உலகிற்கு அறிவிக்க வந்த இருபால் துறவரத்தார்கள் கார்ப்பரேட் கிறிஸ்தவமாக மாற்றி வருகிறார்கள்.
இயேசு கிறிஸ்து உண்மையை போதித்தார். மக்களை அரசியல் படுத்தாமல் மாயாஜால ஜும் பூம் பா கதை சொல்லி கிறிஸ்தவ போதகர்கள் மக்களுக்கு மடமையை போதிக்கிறார்கள் இதை மக்கள் மேம்பாட்டு கழகம் வன்மையாக கண்டிக்கிறது. பிற அரசியல் கட்சிகளுக்கும் ஒரு கிறிஸ்தவ அரசியல் கட்சிக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு என்பதை கிறிஸ்தவ அரசியல் தலைவர்கள் உணர வேண்டும் கிறித்தவ போராளிகளை போராளிகளாக அரசியல் படுத்த வேண்டும்.
புனித தன்மை கொண்ட தோமையார் அருளானந்தர், ஸ்டான்சாமி, கிரகாம்ஸ்டெயின் தேவசகாயம்பிள்ளை போன்றவர்கள் மத தீவிரவாதிகளால் அரசியல் கொலை செய்யப்பட்டவர்கள். இவர்களின் உயிர் தியாகம் உண்டியல் எடுக்க பயன்படுத்தாமல் அரசியலாக்கப் பட வேண்டும் என்பதே மக்கள் மேம்பாட்டு கழகத்தின் கடமையாக கருதுகிறோம். இதை படித்து விட்டு கிறிஸ்தவர்கள் பிறருக்கு தெரிவிக்க வேண்டியது படித்தவர்களின் கடமையாகும். படித்த அறிவாளிகள் படிக்காத முட்டாள் செய்யும் பணியை தொடர்ந்து செய்து வருவதை புனிதமாக கருத முடியாது. அதற்கு பெயரும் முட்டாள் தனம் தான் என்பதை புரிந்து கொள்ளுங்கள். படித்தவர்கள் மக்களுக்கு நல்ல அரசியலை சொல்லி கொடுங்கள். அரசியல் என்பது சாக்கடை அல்ல அடித்தட்டு மக்களின் வாழ்வியல் கூடம். பாராளுமன்றம் பன்றி தொழுவம் அல்ல பாமர மக்களின் பசி போக்கும் கோவில், இப்படி பட்ட அரசியலை ஆன்மீக வாதிகள் அரசியலை பாழாக்கி விட்டனர். இந்த சான்றிதழ்களை மதம் தர முடியாது அரசாங்கம் தான் தர முடியும் அப்படி என்றால் கிறிஸ்தவ மக்கள் அரசியலை தெரிந்துகொள்ள வேண்டும்.
எடுத்துக்காட்டு:- இந்த சான்றிதழ்களை மதம் தர முடியாது அரசாங்கம் தான் தர முடியும் அப்படி என்றால் கிறிஸ்தவ மக்கள் அரசியலை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும்.
1.பாஸ்போர்ட் 2.கேஸ் பில் 3.தண்ணீர் வரி ரசீது 4.ரேசன் அட்டை 5.வங்கி கணக்கு புத்தகம் 6.ஆதார் கார்டு
7.பத்தாம் வகுப்பு சான்றிதழ் 8.பிறப்பு சான்றிதழ் 9. பான்கார்டு.10. இறப்பு சான்றிதழ் 11. ஓட்டுநர் உரிமம்.
12 .கிசான் சான்று 13 காப்பீடு கார்டு. கிறிஸ்தவர்களே அரசியலாக அணி திரளுங்கள் அடிப்படை உரிமைகளை பெற்றுக்கொள்ளுங்கள் என அறைகூவல் விடுக்கிறது மக்கள் மேம்பாட்டுக் கழகம். இந்த கிறிஸ்துமஸ் நாளில் கிறிஸ்தவர்கள் உறுதி ஏற்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.







