கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர்,சிவகங்கை மாவட்டம்,சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பிரான்மலை ஊராட்சியில் நேற்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்
துறையின் சார்பில் முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டசத்து பெட்டகங்களை வழங்கினர். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி ப சிதம்பரம், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி, துணை இயக்குநர் (சுகாதாரம்)
விஜய்சந்திரன் உட்பட பலர் உள்ளனர்.