மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆகியோர் இன்று நீலகிரி மாவட்டம், கூடலூர் வட்டார அரசு மருத்துவமனை, ரூ.31 கோடி மதிப்பீட்டில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்துவதற்கான கட்டிடப் பணியினை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்கள். இந்நிகழ்வில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் மு.அருணா, இணை இயக்குநர் நலப்பணிகள் மருபழனிச்சாமி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உடனிருந்தனர்