சென்னை எம்ஜிஆர் நகர் 138 வது வார்டு, முல்லை தெருவில் நேற்றிரவு மின்வடகம்பி அறுந்து விழுந்தது. தகவல் அறிந்து உடனடியாக EB AE யிடம் சொல்லி ஆட்களை அனுப்பி சரி செய்ததுடன் இன்று காலை 138வது வார்டு கவுன்சிலர் கே.கண்ணன் EB AE சந்திரபிரகாஷ் உடன் சென்று அறுந்த கம்பியை மாற்றி, புதிய மின்வடகம்பியை மாற்றி போட ஏற்பாடு செய்து CORP AE சரவணனனை வரவைத்து, பொது மக்களிடம் மற்ற குறைகளையும் களைய ஏற்பாடு செய்யப்பட்டது. உடன் வட்ட செயலாளர் சோசெந்தில்குமார்,, பச்சையப்பன், சபரி ஆகியோர் இருந்தனர்.


