முதல்வர் ஸ்டாலினுக்கு திருமாவளவன் வேண்டுகொள் – மத்திய – மாநில அரசின் உறவுகளை ஆராய ஆணையம் அமைக்க வேண்டும்…!

சென்னை: “மத்திய – மாநில அரசின் உறவுகளை ஆய்வு செய்ய ஆணையம் அமைக்க வேண்டும்” என்று தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “மாநில உரிமைகள் பெருமளவில் பறிக்கப்படும் இன்றைய சூழலில், மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையிலான உறவை ஆராய்ந்து பரிந்துரைகள் செய்வதற்கு ஆணையம் ஒன்றைத் தமிழ்நாடு அரசு அமைக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். தமிழ்நாடு அரசால் இயற்றப்பட்ட சட்டங்களுக்கு ஒப்புதல் தராததோடு, மாநில நிர்வாகத்தையே முடக்கும் வகையில் ஆளுநர் செயல்பட்டு வருவதால் இப்போது தமிழ்நாடு அரசு அவருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மாநில அரசுகளை அதிகாரமற்றவையாக ஆக்குவதன் மூலம் ‘ஒரே நாடு ஒரே ஆட்சி’ என ஆக்குவதற்கு மத்திய பாஜக அரசு முயற்சிக்கிறது.

மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையிலான உறவுகள் குறித்து நமது அரசியலமைப்புச் சட்டத்தின் பாகம்-11 இல் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டதற்கு மாறாக அப்போதிருந்த மத்திய அரசு மாநில உரிமைகளைப் பறிக்கத் தொடங்கியது. அதற்கு எதிரான குரல்கள் 1960-களிலேயே ஒலிக்கத் தொடங்கின. அதனால் மத்திய – மாநில உறவுகளை ஆய்வு செய்வதற்காக நிர்வாக சீர்திருத்த ஆணையத்தை (1966) மத்திய அரசு அமைத்தது. அந்த ஆணையமும் பல்வேறு பரிந்துரைகளை வழங்கியது.

நிர்வாக சீர்திருத்த ஆணையத்தின் செயல்பாட்டில் மன நிறைவுகொள்ளாத அன்றைய தமிழ்நாடு அரசு 1969-ஆம் ஆண்டு நீதிபதி பி.வி.இராஜமன்னார் தலைமையில் ஒரு ஆணையத்தை அமைத்தது. அந்த ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் மாநில சுயாட்சிக்கான தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. தமிழக அரசு இயற்றிய மாநில சுயாட்சி தீர்மானம் இந்தியா முழுவதும் மாநில உரிமைகள் குறித்த விழிப்புணர்வை உருவாக்கியது.

தற்போதைய ஓன்றிய பாஜக அரசின் அதிகாரக் குவிப்பு நடவடிக்கை இதுவரை அமைதி காத்து வந்த மாநிலங்களிலும்கூட உரிமைக்கான வேட்கையை அதிகரிக்கச் செய்துள்ளது. இந்தச் சூழலைப் பயன்படுத்திக்கொண்டு மாநில உரிமைகள் குறித்த புரிதலை இந்திய அளவில் எடுத்துச்செல்ல வேண்டிய கடமை தமிழ்நாடு அரசுக்கு உள்ளது. மத்திய – மாநில உறவுகளில் ஏற்பட்டுள்ள விரிசல்களை அடையாளம் காணவும், மாநிலங்களின் அதிகாரங்களை மீட்கவும் பரிந்துரைகளைச் செய்வதற்கு 1969-இல் இராஜமன்னார் குழு அமைக்கப்பட்டது. அதே போல் தற்போதும் குழு ஒன்றை அமைக்க தமிழக அரசு முன்வரவேண்டும் என முதல்வர் ஸ்டாலினை விசிக தலைவர் தொல்.திருமாவளவன் வேண்டுகொள்விடுத்தார்.

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை