மு.க.ஸ்டாலினும் ராகுல் காந்தியில் கோவையில் தேர்தல் பிரச்சாரம் : நாடாளுமன்ற பொதுத்தேர்தல்

இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கோவையில், முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின், ராகுல்காந்தி இன்று கூட்டாக பிரச்சாரம் செய்கின்றனர். இதையடுத்து  அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. டிரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

கோவை  செட்டிபாளையத்தில் நடைபெறும் இன்று மாலை நடைபெற உள்ள  பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ராகுல்காந்தி உரை நிகழ்த்த உள்ளனர். ஒரே நாளில் இரு இடங்களில் பரப்புரை மேற்கொள்ளும் வகையில் ராகுல்காந்தியின்  பயணத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

இன்று காலை நெல்லையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் ராகுல் காந்தி, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மற்றும் மதுரை ஆகிய எட்டு தொகுதிகளில் போட்டியிடும் I.N.D.I.A. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொள்கிறார்.

இதுதொடர்பாக, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை அழைப்பு விடுத்துள்ளாா். அதில்,  ‘இந்தியா’ கூட்டணி சாா்பாக திருநெல்வேலி பெல் மைதானத்தில் வெள்ளிக்கிழமை மாலை 3 மணிக்கு நடைபெறும் தோ்தல் பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவா் ராகுல் காந்தி பங்கேற்கிறாா். அதே போல கோவை செட்டிபாளையம் எல்.அன்.டி. பைபாஸ் சாலையில் மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ள தோ்தல் பிரசார கூட்டத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலினோடும் இணைந்து ராகுல் காந்தி பங்கேற்கிறாா். சமூகநீதி மண்ணாக இருக்கும் தமிழகத்தில் ராகுல்காந்தி பங்கேற்கும் பிரசார கூட்டங்களுக்கு மக்கள் திரண்டு வந்து ‘இந்தியா’ கூட்டணிக்கு ஆதரவு தர வேண்டும் என்று கூறியுள்ளாா்.

இந்த நிலையில், இன்று காலை நெல்லை வரும் ராகுல்காந்தி, அங்கு இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மேற்கொள்கிறார். டெல்லியில் இருந்து சென்னை வரும் ராகுல்காந்தி அங்கிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வருகிறார். அங்கிருந்து நெல்லை வரும் அவர் நெல்லை பாளையங்கோட்டை பெல் மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு நடக்கும் பொதுக்கூட்டத்தில் இந்தியா கூட்டணியின் நெல்லை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். மேலும் ரோடு ஷோவிற்கும் ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளது. இதற்காக அந்த பகுதி சாலை முழுவதும் இரு புறங்களிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

நெல்லை  நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு மாலை 4 மணிக்கு பாளை. ஜான்ஸ் கல்லூரி ஹெலிபேட் தளத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ராகுல்காந்தி கோவை புறப்பட்டு செல்கிறார். கோவை நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக கணபதி ராஜ்குமாரும், பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமியும் போட்டியிடுகின்றனர்.

இவர்களின் வெற்றிக்காக தொகுதி பொறுப்பாளர் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, கோவையில் முகாமிட்டு, தொழில்துறை நிர்வாகிகள், சமுதாய அமைப்புகள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகளை சந்தித்து, ஆதரவு திரட்டி வருகிறார். மா.கம்யூ., தலைமை அரசியல் குழு உறுப்பினர் பிரகாஷ்காரத், காங்., மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு செயலாளர் சுபேர்கான் ஆகியோர் இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்காக பிரசாரம் செய்து  வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று மாலை  கோவை  செட்டிபாளையத்தில் நடைபெறும்  பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ராகுல்காந்தி  இணைந்து வாக்கு சேகரித்து, உரை நிகழ்த்த உள்ளனர்.  இன்று (12ம் தேதி) மாலை 5 மணிக்கு, கோவை எல் அண்ட் டி பைபாஸ் ரோடு, அருகே மைதானத்தில்  அமைக்கப்பட்டுள்ள ஒரே மேடையில் தேர்தல் பிரசாரம் செய்கிறார்கள். இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின், ராகுல்காந்தி ஒரே மேடையில் பிரசாரம் செய்ய இருப்பது இந்திய கூட்டணி கட்சியினரிடையே புது உத்வேகத்தையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.