அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் உலக புகழ்பெற்ற தூத்துக்குடி பரிசுத்த பனிமய அன்னை பேராலய 444-ம் ஆண்டு பெருவிழா சிவகங்கை அருகே 40 வயது நபருக்கு நேர்ந்த கொடூரம் தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது. தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மெரினாவில் ‘பேனா நினைவு சின்னம்‘ கட்டுமான பணி: சி.எம்.டி.ஏ. அனுமதி பெற ஏற்பாடுகள் தீவிரம்

சென்னை:
முன்னாள் முதலமைச்சரும், மறைந்த தி.மு.க. தலைவருமான கருணாநிதிக்கு மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.23 ஏக்கர் பரப்பளவில் அரசு சார்பில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது. உதயசூரியன் வடிவத்தில் அமைக்கப்படும் நினைவிடத்தின் முகப்பில் கருணாநிதியின் வாழ்க்கை இலக்கிய சிந்தனைகளை விளக்கும் வகையில் நவீன ஒளி படங்களுடன் கூடிய வளாகம் அமைக்கப்படுகிறது.
இந்த பணிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, நடுக்கடலில் ரூ.81 கோடி செலவில் பிரமாண்ட பேனா வடிவம் ஒன்றை 134 அடி உயரத்துக்கு (42 மீட்டர்) அமைக்க திட்டமிட்டு அதற்கான மதிப்பீடுகளும் தயார் செய்யப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மெரினா கடற்கரையில் கருணாநிதியின் நினைவிடத்தில் இருந்து 360 மீட்டர் தொலைவில் நடுக்கடலில் இந்த பிரமாண்ட பேனா வடிவிலான நினைவு சின்னத்தை அமைக்க இருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது. கருணாநிதி நினைவிடத்தின் பின் பகுதியில் பெரிய கேட் அமைத்து அதன் வழியாக மக்கள் கடல் மேல் நடந்து சென்று இந்த நினைவு சின்னத்தை அடையும் வகையில் 650 மீட்டர் தூரத்துக்கு இரும்பு பாலம் அமைக்கவும் திட்டம் தீட்டி உள்ளனர்.
இந்த பாலம் நிலத்தின் மீது 290 மீட்டரும், கடலின் மீது 360 மீட்டரும் அமையும் வகையில் கட்டப்படும். பொதுமக்கள் பாலத்தில் நடந்து செல்லும் வகையில் கடல் மேல் 6 மீட்டர் உயரத்தில் 7 மீட்டர் அகலத்தில் 3 மீட்டர் கண்ணாடி தரையமைப்பாக பாலம் அமைக்கப்படும். சென்னையின் தட்ப வெப்ப நிலைக்கு ஏற்றவாறும், சுற்றுப்புற சூழலுக்கு ஏற்ற வகையிலும் இந்த பாலம் வடிவமைக்கப்படுகிறது. மீன்பிடி படகுகளின் இயக்கம் எந்த வகையிலும் தடைபடாத வகையில் பாலம் வடிவமைக்கப்படுவதாக திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையை பார்ப்பதற்கு படகில் சென்று வருவது போல் மெரினாவில் இருந்து நடுக்கடலுக்கு கடலின் அழகை ரசித்தபடி பாலத்தில் நடந்து சென்று பேனா சின்னத்தை அடையும் வகையில் திட்டம் தீட் டப்பட்டு உள்ளது. இந்த பிரமாண்ட நினைவு சின்னத்துக்கு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேனா நினைவுச் சின்னம் என்று பெயரிடப்பட்டு உள்ளது. இந்த திட்டத்துக்கு மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் முன்மொழிவு பெறப்பட்டுவிட்டது.
இதன் அடுத்த கட்டமாக மத்திய அரசின் அனுமதிக்காக இந்த திட்டத்தை தமிழக அரசு அனுப்பி வைத்தது. கடலோர ஒழுங்கு முறை ஆணையம் இந்த திட்ட அறிக்கையை விரிவாக ஆய்வு செய்தது. உயர்மட்ட அளவிலான அதிகாரிகள் அடங்கிய குழுவினர் இந்த திட்டத்துக்கு முதற் கட்ட அனுமதி வழங்கிவிட்டனர். இந்நிலையில் பேனா நினைவு சின்னம் அமைக்க அனுமதி கோரி மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்திற்கு தமிழக அரசின் பொதுப்பணித் துறை கடிதம் அனுப்பி இருந்தது. தமிழக அரசின் விண்ணப்பத்தை பரிசீலித்த மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு பொதுமக்களின் கருத்து, மீனவ சமுதாய மக்களின் கருத்துக்களை கேட்க வேண்டும் என்று நிபந்தனை விதித்திருந்தது.
அதன்படி கடந்த ஜனவரி மாதம் 31-ந்தேதி சென்னை கலைவாணர் அரங்கில் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் மாவட்ட கலெக்டர் அமிர்தஜோதி முன்னிலையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும், பொதுப்பணித் துறை தலைமை அதிகாரிகளும் பங்கேற்று கருத்து கேட்டனர். அப்போது அந்த கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட 12 பேர் பேனா நினைவு சின்னத்தை கடலில் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசினார்கள். பேனா நினைவு சின்னத் துக்கு ஆதரவாக 22 பேர் கருத்துக்களை பதிவு செய்திருந்தனர்.
இவர்கள் தெரிவித்த கருத்துக்கள் அனைத்தும் முழுமையாக பதிவு செய்யப்பட்டு அறிக்கையாக தயாரிக்கப்பட்டிருந்தது. பொதுமக்களின் கருத்துக்கள் மற்றும் பொதுப்பணித் துறை தயாரித்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை பரிசீலித்த தமிழ்நாடு கடற்கரை மேலாண்மை மண்டல ஆணையம் அதற்கு ஒப்புதல் வழங்கி மத்திய அரசின் சுற்றுச்சூழல் மதிப்பீட்டு குழுவுக்கு பரிந்துரை செய்துள்ளது. தமிழ்நாடு கடற்கரை மேலாண்மை மண்டல ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று தமிழக பொதுப்பணித்துறை சார்பில் பேனா நினைவு சின்னத்திற்கு ஒப்புதல் வழங்குமாறு மத்திய அரசின் சுற்றுச்சூழல் மதிப்பீட்டு குழுவுக்கும், கடலோர ஒழுங்குமுறை ஆணையத்துக்கும் விரிவாக கடிதம் அனுப்பி உள்ளது.
அதில் பேனா நினைவு சின்னம் கட்டுமான பணிகளை விரைவில் தொடங்க உள்ளதாகவும் இதற்கு அனுமதி வழங்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு விரைவில் அனுமதி வழங்கி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் (சி.எம்.டி.ஏ.) பேனா நினைவு சின்னத்தின் வரை படத்தை சமர்ப்பித்து அனுமதி வாங்குவதற்கு அடுத்த கட்டமாக ஏற்பாடுகள் நடந்து வருகிறது. கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3-ந்தேதி பேனா நினைவு சின்னத்துக்கு அடிக்கல் நாட்டும் வகையில் பணிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின்

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி கல்வி அமைச்சக பொறுப்பை ஏற்றுக்கொண்டார் – மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி இன்று கடமை மாளிகையில் கல்வி அமைச்சகத்தின் பொறுப்பை