அரியானாவில் கொரோனா பரவல் அதிகரிப்பு :பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயமாகிறது

அரியானா:
உலகம் முழுவதும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா என்கிற புதிய வைரஸ் தாக்குதல் தொடங்கியது. ஆண்டுதோறும் தவறாமல் சில பருவ காலங்களில் தனது தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த ஆண்டு தற்போது தனது தாக்குதலை தொடங்கி கைவரிசை காட்டி வருகிறது.
கடந்த சில வாரங்களாக இந்தியாமுழுவதும் கொரோனா வைரஸ் தொற்று சற்று அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மேலும் 5357 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 32,814-ஆக உயர்ந்துள்ளது.
அரியானாவிலும் கொரோனா பரவல் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. தொற்றை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், தொற்று பாதிப்பு அதிகரிப்புக்கு மத்தியில், பொது இடங்களில் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்குவதாக அரியானா மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.100க்கும் மேற்பட்ட மக்கள் கூடும் பொது இடங்கள், அரசு அலுவலகங்கள், வணிக வளாகங்கள் போன்ற இடங்களில் பொது மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
அரியானாவின் அனைத்து பகுதிகளிலும் இது செயல்படுத்தப்படுவதை உறுதி செய்ய மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் பஞ்சாயத்துகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும். தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டுபிடித்து தனிமைப்படுத்த வேண்டும்” என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரரான கார்த்தி சிறுமியை அழைத்து சென்றுள்ளார்.

“சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரரான கார்த்தி சிறுமியை அழைத்து சென்றுள்ளார். குற்றத்தை மறைக்க முயன்றதால்

காரைக்குடி தொகுதியின் செல்லப்பிள்ளை மாண்புமிகு.Dr .TK பிரபு MLA

முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்பிறப்பொக்கும் எல்ல உயிர்ஜோசப் விஜய் அவர்களுக்கும் தமிழ்நாட்டின் அமைச்சராகபதவியேற்கும்காரைக்குடி தொகுதியின்

தமிழ்நாட்டில் புதிய ராக்கெட் உற்பத்தி மற்றும் சோதனை மையத்தை அமைக்கிறது விண்வெளித் துறை

🔹🔸தமிழ்நாட்டில் புதிய ராக்கெட் உற்பத்தி மற்றும் சோதனை மையத்தை அமைக்கிறது விண்வெளித் துறை!விண்வெளித்

தென் மண்டலத்தில் அதிரடி மாற்றம் : தென் மண்டலத்தில் 94 காவல் ஆய்வாளர்களை பணியிடமாற்றம் செய்து தென்மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி உத்தரவு

🔹🔸 தென் மண்டலத்தில் அதிரடி மாற்றம் : தென் மண்டலத்தில் 94 காவல்