ஜெய்ப்பூர் :
ராஜஸ்தான் மாநிலம் தௌசா மாவட்டத்தில் ரயில்வே மேம்பாலத்திலிருந்து பேருந்து திடீர் என ஓட்டுனரின் கட்டுபாட்டை இழந்ததால் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் இந்த விபத்தில் 28 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்தில் காயமடைந்தோர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த விபத்து சம்பவம் பற்றி போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகிறார்கள்.