வீரமங்கை ராணி வேலு நாச்சியாரை அவரது பிறந்தநாளில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று நினைவுகூர்ந்துள்ளார். காலனி ஆட்சிக்கு எதிரான வீரமிகு போராட்டத்தை அவர் நடத்தினார் என்றும், ஈடுஇணையற்ற துணிச்சலையும், போர்த்திறன் நுண்ணறிவையும் வெளிப்படுத்தினார் என்றும் திரு மோடி குறிப்பிட்டுள்ளார்.சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி பதிவிட்டிருப்பதாவது;“வீரமங்கை ராணி வேலு நாச்சியாரை அவரது பிறந்தநாளில் நினைவுகூர்கிறேன். காலனி ஆட்சிக்கு எதிரான வீரமிகு போராட்டத்தை நடத்திய அவர், ஈடுஇணையற்ற துணிச்சலையும், போர்த்திறன் நுண்ணறிவையும் வெளிப்படுத்தினார். ஒடுக்குமுறைக்கு எதிராக துணிந்து நிற்கவும் விடுதலைக்காக போராடவும் பல தலைமுறையினருக்கும் அவர் உந்துசக்தியாக விளங்கினார். மகளிருக்கு அதிகாரமளித்தலுக்கான அவரின் பங்களிப்பு பெரிதும் பாராட்டப்படுகிறது”.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்






