ரூ.35 கோடியில் 15 கோவில்களில் ராஜகோபுரம், 18 கோவில்களுக்கு புதிய தேர் : அமைச்சர் சேகர்பாபு

சென்னை:
ரூ.35 கோடி செலவில் தமிழகத்தில் உள்ள 15 கோவில்களில் ராஜகோபுரம், 18 கோவில்களுக்கு புதிய தேர் அமைக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கையின் போது அமைச்சர் சேகர்பாபு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். திருச்சி மண்ணச்சநல்லூர் ஸ்ரீலிவனேஸ்வரர் கோவிலில் ரூ.7 கோடியில் 5 நிலைகளை கொண்ட ராஜகோபுரம் கட்டப்படும்.
விழுப்புரம் முன்னூர் ஆடவல்லீஸ்வரர் கோவில், கும்பகோணம் கீழப்பழையாறை சோமநாத சுவாமி கோவில், ஈரோடு, வேலாயுதசாமி கோவில், நாமக்கல் தோளூர் நாச்சியார் கோவில், வள்ளிபுரம் நல்லாயி அம்மன் கோவில் உள்பட 15 கோவில்களில் ரூ.26 கோடி மதிப்பில் ராஜகோபுரங்கள் கட்டப்படும் என்று கூறியுள்ளார்.
திருச்செங்கோடு அர்த்த நாரீஸ்வரர் கோவில், திருவாருர் பூவலூர் சதுரங்க வல்லப நாதசாமி கோவில் ஸ்ரீவைகுண்டம் வல்லநாடு திருமூலநாத சுவாமி கோவில் உள்பட 18 கோவில்களுக்கு ரூ.9.20 கோடி மதிப்பில் புதிய மரத்தேர்கள் செய்யப்படும். சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில், மருதமலை கோவில் உள்பட 5 கோவில்களில் ரூ.200 கோடியில் அடிப்படை வசதிகள் செய்யப்படும். மேலும் 108 ஆன்மீக நூல்கள் வெளியிடப்படும்.
ராமேஸ்வரம்-காசி இலவச ஆன்மீக பயணத்துக்கு இந்த ஆண்டு 300 பேர் அழைத்து செல்லப்படுவார்கள். கட்டணமில்லா இலவச திருமண உதவி ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.4 ஆயிரத்து 262 கோடி மதிப்புள்ள 4578 ஏக்கர் கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது. 756 கோவில்களில் ஒருவேளை அன்னதானம் வழங்கப்படுகிறது. 8 கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது எனவும் கூறியுள்ளார்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட