வடகிழக்கு மாநிலங்களில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான பணிக்குழுவின் 5-வது கூட்டம் புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் இன்று நடைபெற்றது. வடகிழக்கு மாநிலங்களில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான திறன் மேம்பாடு, பயிற்சிக் கொள்கைகள், சந்தைப்படுத்துதல் மற்றும் ஊக்குவிப்பு முயற்சிகள் குறித்து விவாதம் நடைபெற்றது.
அசாம், அருணாச்சலப்பிரதேசம், மேகாலயா, மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா ஆகிய எட்டு வடகிழக்கு மாநிலங்களின் அதிகாரிகளும், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகம், சுற்றுலா அமைச்சகம், கலாச்சார அமைச்சகம், தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், இந்திய தொழில்துறை கூட்டமைப்பு (சிஐஐ) மற்றும் பிற தனியார் பங்குதாரர்களின் பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர்.