தூத்துக்குடியில் இ-பைலிங் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
நீதிமன்றங்களில் இ-ஃபைலிங் முறை கட்டாயமாக்கப்படுவதிற்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடி வழக்கறிஞர்கள் கடந்த 8ம் தேதி முதல் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள். இன்று தூத்துக்குடி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகம் முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்கள்
உண்ணாவிரத போராட்டத்திற்கு வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஜோசப் செங்குட்டுவன், தலைமை தாங்கினார் தமிழ்நாடு பாண்டிச்சேரி பார் கவுன்சில் மெம்பர் மைக்கில் ஸ்டான்லி பிரபு உண்ணாவிரதத்தை துவக்கி வைத்தார் இதில் துணைத் தலைவர் செல்வின், செயலாளர் மார்க்கஸ், மற்றும் வழக்கறிஞர்கள் தனசேகர் டேவிட், யுஎஸ் சேகர், அதிசயகுமார், கிஸ்ஸிங்கர் உட்பட 100 கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கொண்டனர்.






