வாலிபர் பரிதாப சாவு

விலைக்கு வாங்க ஓட்டிப் பார்த்தபோது பைக் விபத்து : வாலிபர் பரிதாப சாவு!

கோவில்பட்டியில் பைக்கை விலைக்கு வாங்குவதற்காக ஓட்டிப் பார்த்த போது, எதிர்பாராத விதமாகச் சாலையோர பாலத்தின் தடுப்புச் சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானதில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சுப்பிரமணியபுரம் 3-வது தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் சரவணவரன் (19). இவர், இலுப்பையூரணியைச் சேர்ந்த ஒருவரது மோட்டார் சைக்கிளை விலைக்கு வாங்குவதற்காகப் பேசி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று அந்த நபரிடம் மோட்டார் சைக்கிளை ஓட்டிப் பார்ப்பதற்காகக் கொண்டு வரும்படி அவர் கேட்டுள்ளார். இதையடுத்து அந்த நபர் தோட்டில்லோவன்பட்டி விலக்கு பகுதிக்கு மோட்டார் சைக்கிளைக் கொண்டு வந்து கொடுத்துள்ளார்.நேற்று மாலை 3 மணியளவில் சரவணவரன் அந்த மோட்டார் சைக்கிளை மதுரை – நெல்லை நான்கு வழிச்சாலையை ஒட்டியுள்ள அணுகுசாலையில் உள்ள வேளாண் ஆராய்ச்சி நிலையம் அருகே ஓட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோரம் இருந்த பாலத்தின் தடுப்புச்சுவர் மீது பலமாக மோதியது.இந்த விபத்தில் சரவணவரன் மோட்டார் சைக்கிளிலிருந்து தூக்கி வீசப்பட்டதில், தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்துத் தகவல் அறிந்ததும் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலைக் கைப்பற்றினர்.பின்னர் பிரேதப் பரிசோதனைக்காக உடல் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்துக் கிழக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மோட்டார் சைக்கிளை ஓட்டிப் பார்த்த போது, பாலத்தில் மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கழிவுநீரை பாதுகாப்பு கவசமின்றி அகற்றிய பணியாளர்கள் டேங்கர் லாரி கசிவால் சாலையை ஆக்கிரமித்த கழிவுநீர்

சைதாப்பேட்டை:சென்னை சைதாப் பேட்டை ஜீனீஸ் சாலை யில் உள்ள சென்னை மாநகராட்சி மகப்பேறு

சென்னை மாநகராட்சி சார்பில் குப்பையைப் பிரிப்போம் & நாளையை காப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

சென்னை:பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் பொதுமககளிடையே குப்பைகளைத் தரம் பிரித்து வழங்கும் பழக்கத்தை

கூடுவாஞ்சேரியில் பெண்ணை துண்டு துண்டாக வெட்டி பிரியாணி சமைத்த ஜோடி; உடல் பாகங்கள் ரயிலில் கண்டெடுப்பு

கூடுவாஞ்சேரி:கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு சென்ற ரயிலில் ரத்தக்கரையுடன்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் முதல்-வர் பங்கேற்பா?- அமைச்சர் நிர்மல்குமார் பதில்

மதுரை:மதுரையில் அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவிக்கையில், மதுரை

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழக ஆசிரியர்கள் தேர்வு:- முதல்வர் விஜய் வாழ்த்து

சென்னை:தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு முதல்வர் விஜய்