சென்னை:
விருத்தாச்சலம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பிரேமலதா விஜயகாந்த் சட்டசபையில் பேசுகையில், விருத்தாச்சலத்தை மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். மழை பெய்ய தொடங்கிவிட்டது. அறுவடை செய்யப்பட்ட நெற்கள் திறந்த வெளியில் கிடைக்கிறது. அதை குடோனில் வைத்து பாதுகாக்க வேண்டும் என்று அனைவரும் வலியறுத்துகிறோம்.
விவசாயிகளை பாதுகாக்க வேண்டியது இந்த அரசின் கடமை. இந்த ஆட்சி புதிய ஆட்சி என்பதினாலோ என்னவோ இன்னும் பல நாட்கள் ஆகிய பின்பும் அந்த நெற்களை இன்னும் கிடங்கிற்கு கொண்டு போக முடியல. கொள்முதல் செய்ய முடியாததுனால லட்சக்கணக்கான விவசாயிகள் கஷ்டப்பட்டு இருக்கிறார். உடனடியாக நெற்கொள்முதல் செய்யவேண்டும்.
தமிழக பிரச்சனை. இது வேறுபாடு பார்க்க வேண்டாம். அனைவரையும் டெல்லிக்கு அழைத்து சென்று பிரதமரை சந்திக்க வேண்டும். விவசாய கடன் முழு தள்ளுபடி செய்யவில்லை என்பது ஏமாற்றம். அதை அரசு பரிசீலிக்க வேண்டும்.
காவிரியில் இருந்து தண்ணீர் விந்துவிட்டது என பெருமை பட்டுக்கொள்ள ஒன்றும் இல்லை. உபரிநீர் தான் வருகிறது. காவிரியில் எங்களுக்கான உரிமையை தந்து தான் ஆக வேண்டும். முதலமைச்சர் கர்நாடக சென்று போய் பார்த்து பேசினால் என்ன தப்பு? முதலமைச்சர் செல்ல வேண்டும் என்று எடுத்த முடிவிற்கு தேமுதிக துணை நிற்கிறது. முதலமைச்சருக்கு தலைகுனிவு வந்தால் தமிழ்நாடே வெகுண்டெழும் என்றார்.

மக்களவையில் நிறைவேறியது யுபிஐ மசோதா: யாருக்கெல்லாம் கட்டணம் வசூலிக்கப்படும்? –
புதுடெல்லி:எம்.டி.ஆர். எனப்படும் வர்த்தக தள்ளுபடி கட்டணம் என்பது வணிகர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும்,






