விரைவில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.100-க்கு விற்பனையாகும்….

சின்ன வெங்காயம் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து வருவதால், விரைவில் ஒரு கிலோ ரூ.100-ஐ தொடும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

திண்டுக்கல் மற்றும் சுற்றுப்புற வட்டாரங்களில் வெங்காயம் அதிகம் விளைவிக்கப்படுகிறது. இதனால் திண்டுக்கல் நகரில் வெங்காயத்துக்கு தனியாக சந்தை உள்ளது. இந்த சந்தை திங்கள், புதன், வெள்ளி என வாரத்தில் 3 நாட்கள் நடைபெறுகிறது. இங்கு மொத்தமாக மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் வாங்கிச்சென்று விற்று வருகிறார்கள. இதோடு மட்டுமல்லாமல் வெளி நாடுகளுக்கும் திண்டுக்கல்லில் இருந்து வெங்காயம் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களான கரூர், திருப்பூர், தேனி மற்றும் திருச்சி, அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து திண்டுக்கல் வெங்காய மார்க்கெட்டுக்கு, விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த வெங்காயத்தை கொண்டு வந்து மொத்தமாக விற்பனை செய்கின்றனர்.

பெரிய வெங்காயம் கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து லாரிகளில் மொத்தமாக திண்டுக்கல் சந்தைக்கு வருகிறது.

ஜூன் மாத தொடக்கத்தில் சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.50- ஐ கடந்து விற்பனையானது. அதன்பிறகு, படிப்படியாக விலை உயர்ந்து நேற்று ஒரு கிலோ வெங்காயம் மொத்த மார்க்கெட்டில் ரூ.80-க்கு விற்பனையானது.

சின்ன வெங்காயம் வரத்து தொடர்ந்து குறைந்து வருவதால் மற்றும் தேவை அதிகரிப்பால் விரைவில் கிலோ ரூ. 100 என்ற விலையை தொடும் என வியாபாரிகள் கூறினர்.

இதுகுறித்து வெங்காயம் ஏற்றுமதியாளர் சங்க முன்னாள் தலைவர் சவுந்திரராஜன் கூறுகையில், கடந்த முறை வெங்காயம் பயிரிட்ட விவசாயிகள் விலை கிடைக்காமல் இழப்பை சந்தித்ததால், இந்த முறை குறைந்த பரப்பிலேயே வெங்காயம் பயிரிட்டனர். இதன் விளைவாக தற்போது வரத்து குறைந்து விலை அதிகமாக உள்ளது.

இந்த நிலை, மேலும் ஒரு மாதம் நீடிக்கபட வாய்ப்புள்ளதாக தெரிவிறது. புதிதாக நடப்பட்ட வெங்காயம் அறுவடை செய்து சந்தைக்கு வரும் பட்சத்தில் வரத்து அதிகரித்து அதன் விலை குறைய வாய்ப்புள்ளது என்று தெரிவித்தனர்.

சின்ன வெங்காய விலை அதிகரிக்கும் நிலையில், பெரிய வெங்காயம் வரத்து அதிகரிப்பால் ஒரு கிலோ ரூ.20 முதல் ரூ.25 வரை விலை குறைந்து விற்பனையாவது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.