விஷச்சாராயம் விற்றவருக்கு வழங்கிய ரூ.50 ஆயிரம் நிவாரண தொகை ரத்து: செங்கல்பட்டு கலெக்டர் நடவடிக்கை

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பகுதியில் விஷச்சாராயம் குடித்ததில் 8 பேர் வரை பலியாகிவிட்டனர். இதில் 5 பேர் ஆபத்தான நிலையில் செங்கல்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் விஷச் சாராயத்தை விற்பனை செய்த கருக்கந்தாங்கல் பகுதியை சேர்ந்த அமாவாசை, விளம்பூர் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் பனையூரை சேர்ந்த ராஜேஷ், ஒதியூரை சேர்ந்த வேலு, சந்துரு ஆகியோரை போலீசார் கைது செய்திருந்தனர். இதில் அமாவாசை என்பவரும் அந்த விஷச்சாராயத்தை குடித்திருந்ததால் அவரது உடல்நிலை மோசமானது. இதனால் அவரை போலீசார் செங்கல்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்து இருந்தனர். இதனால் விஷச்சாராயம் குடித்தவர்களுக்கு நிவாரண உதவி வழங்கும் பட்டியலில் அமாவாசை பெயரையும் அதிகாரிகள் சேர்த்துவிட்டனர். இதை தமிழக பாரதீய ஜனதா தலைவர் அண்ணாமலை கண்டுபிடித்து டுவிட்டரில் பதிவிட்டார். கள்ளச் சாராயம் விற்றவருக்கும் தமிழக அரசு ரூ.50 ஆயிரம் இழப்பீடு அறிவித்துள்ளதாக அவர் குற்றம் சாட்டினார். இது சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் இப்போது அமாவாசைக்கு வழங்கப்பட்ட ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையை செங்கல்பட்டு கலெக்டர் ரத்து செய்து உள்ளார்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட