வேலூரில் மரபு காய்கறி, கிழங்கு திருவிழா; விவசாயிகள் ஆர்வம்

தமிழ்நாடு விதை சேகரிப்பாளர் கூட்டமைப்பின் சார்பில், மரபு காய்கறி மற்றும் கிழங்கு திருவிழா வேலுார் வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. விவசாயிகள், பொதுமக்கள் வியக்கும் வகையில் இந்த கண்காட்சி அமைந்திருந்தது. இதில், 500க்கும் அதிகமான மரபு காய்கறி மற்றும் கிழங்கு வகைகளின் கண்காட்சி மற்றும் விதைகள் விற்பனை நடந்தது. தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் சிறப்பு வாய்ந்த காய்கறிகள், கிழங்கு வகைகள் இடம்பெற்றிருந்தன. குறிப்பாக கண்காட்சியில், மதனப்பள்ளி, கருஞ்சிவப்பு, லைபீரியா, கருப்பு வால், கருப்பு பிளம், சிகப்பு வால், கொடி பிளம், பச்சை வரி, ஆப்பிள் உள்ளிட்ட 86 வகையான தக்காளி வகைகளும், வெள்ளை நிற கத்தரி, செவந்தம்பட்டி கத்தரி, வெள்ளை தொப்பி கத்தரி, திண்டுக்கல் சல்லி, பச்சை வரி, வெள்ளை முள், காளான், வெள்ளை மடிப்பு, பொள்ளாச்சி வரி உள்ளிட்ட 30 கத்தரிக்காய் வகைகளும் இடம்பெற்று இருந்தது. அதோடு, 60 வகையான மிளகாய் வகைகள், 40 வகையான சுரக்காய் மற்றும் பரங்கிக்காய் வகைகள் இடம்பெற்று இருந்தது. இதேபோன்று, சிகப்பு மக்காச்சோளம், மஞ்சள் மக்காச்சோளம், பலநிற மக்காச்சோளம், கருப்பு மக்காச்சோளம் ஆகியவையும், பன்னீர் பாகற்காய், ருத்திராட்சை பாகற்காய், வெளிர் பச்சை பாகற்காய், குருவி தலை பாகற்காய் என பாகற்காய் வகைகளும் இடம்பெற்று இருந்தது. கிழங்கு வகைகளில் யானை பாதம் கிழங்கு, முள்ளன் கிழங்கு, வாழை வெற்றிலைவள்ளி, சேனை வெற்றிலை வள்ளி, பரணி வெற்றிலைவள்ளி, கூகை கிழங்கு உள்ளிட்ட 90 வகையான கிழங்குகள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. ‘இப்போது புவிசார் குறியீடு பெற்றுள்ள வேலூர் இலவம்பாடி கத்தரிக்காய் கூட நம்மிடம் விதைகளாக வழங்கப்படுபவை மரபணு மாற்றப்பட்டவை அல்லது ஒட்டுரகங்கள்தான். நாங்கள் அதை அணைக்கட்டு, ஒடுகத்தூர் பகுதிகளில் தேடித்தேடி மரபு சார்ந்த இலவம்பாடி கத்தரி விதைகளை வாங்கி சேகரித்து உற்பத்தி செய்து தருகிறோம்’ என தெரிவித்தனர். இக்கண்காட்சியில் 500க்கும் மேற்பட்ட வகைகளில் பாரம்பரிய காய்கறிகள், விதைகள், அவற்றுக்கான செடி, கொடிகள், கிழங்குகள், கீரை வகைகள், நாம் உண்ணத்தகுந்த களைகளாக பாவித்து வீசியெறியும் கீரைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து கண்காட்சியை பார்த்து காய்கறிகள் உள்ளிட்டவற்றை வாங்கி சென்றனர். காய்கறிகளுடன், விதைகளையும் அதிகளவில் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். அதோடு இயற்கை வேளாண் ஆர்வலர்கள், கூட்டமைப்பு நிர்வாகிகள் பேச்சுக்களை ஆர்வமுடன் கவனித்து பார்வையாளர்கள் குறிப்பு எடுத்துக்கொண்டனர். இந்த அவசர காலத்தில் ஹைபிரிடு காய்கறிகளை உண்டு வாழ்ந்து வரும் மக்களுக்கு, உடலுக்கு நன்மையை மட்டுமே அளிக்கும் மரபு காய்கறிகள், கிழங்குகள் உற்பத்தி செய்ய வேண்டும் என்ற ஆர்வமும் ஏற்பட்டது. இதனால், பலரும் தங்களுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் கிழங்குகளின் விதைகளை வாங்கிச் சென்றனர். அதோடு, விவசாயிகளும் தங்களுக்கு தேவையான விதைகளை பெற்று சென்றனர். இதில் சிறப்பு விருந்தினராக சிறைத்துறை டிஐஜி செந்தாமரைக்கண்ணன் கலந்து கொண்டு பேசியதாவது: விவசாயிகள் சரியான விதைகளை தேர்வு செய்வதன் மூலம் நாட்டு விதைகளை திரும்ப திரும்ப உருவாக்கலாம். ஆனால் மரபணு மாற்றப்பட்ட விதையால் உருவாகும் காய்கறிகளில் இருந்து கிடைக்கும் விதைகள் மீண்டும் முளைக்காது. விளைச்சலும் சரியாக இருக்காது. கோயம்புத்தூர் சிங்காநல்லூர் மத்திய சிறை வளாகத்தில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் வழிகாட்டுதலில் இருமடி பாத்தி முறையில் விவசாயம் செய்வதுடன் விதைகளும் உற்பத்தி செய்யப்படுகிறது. அங்கு இயற்கை உரம், பஞ்சகவ்யம், அமிர்தகலசம், இயற்கை பூச்சி விரட்டிகள் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இதனால் கூடுதலாகவும் விளைச்சல் கிடைப்பதுடன், விதைகளும் தாராளமாக கிடைக்கிறது. விதைகளுக்காக எங்கும் தேடி செல்வதில்லை. வேலூர் மாவட்டத்திலும் விவசாயிகளும் இதை முன்மாதிரியாக கொண்டு விவசாயம் செய்தால் நீடித்த நிலையான வளர்ச்சியை பெற முடியும். வேலூர் சிறையிலும் அதை பின்பற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

யூடியூப் பார்த்து நாட்டுத் துப்பாக்கி தயாரித்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டார்

பாலகுரு தனது வீட்டின் அருகே உள்ள விளைநிலங்களில் அணில் வேட்டையாடுவதற்காக, யூடியூப் வீடியோக்களைப்

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி கேத் லேப் மற்றும் உயர் தொழில்நுட்ப சிடி ஸ்கேன் திறந்து வைக்கப்பட்டது

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.12.46 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கேத்

வீட்டுமனைப் பாட்டாக்களை மாண்புமிகு தமிழ்நாடுமுதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள்இன்று கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில்பெருநகர

கொல்கத்தாவில் வளர்ச்சித் திட்டங்களின் துவக்க விழாவில் பிரதமர்

ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களே, மத்திய அமைச்சர்கள் சாந்தனு தாக்கூர் அவர்களே,  சுகந்தா மஜும்தார் அவர்களே, மேற்கு வங்க எதிர்க்கட்சித் தலைவர்  சுபேந்து அதிகாரி அவர்களே, நாடாளுமன்ற உறுப்பினர் சமிக் பட்டாச்சார்யா அவர்களே, இதர மக்கள் பிரதிநிதிகளே, தாய்மார்களே, அன்பர்களே,இன்று, கொல்கத்தாவின் மண்ணிலிருந்து, மேற்கு வங்கம் மற்றும் கிழக்கு இந்தியாவிற்கான வளர்ச்சியின் புதிய அத்தியாயம் எழுதப்படுகிறது. சுமார் 18 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் சாலை, ரயில்வே மற்றும் துறைமுக உள்கட்டமைப்புத் திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன. இந்தத் திட்டங்கள் மேற்கு வங்கம் மற்றும் கிழக்கு இந்தியாவிற்கு புதிய உத்வேகத்தை அளிக்கும், வர்த்தகம் மற்றும் தொழில்துறையை மேம்படுத்தும், லட்சக் கணக்கான மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதுடன், அவர்களுக்குப் புதிய வாய்ப்புகளை வழங்கும். கரக்பூர்-மோரேகிராம் விரைவுச் சாலைப் பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, மேற்கு வங்கத்தின் பல பகுதிகளில் பொருளாதார நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும். துப்ராஜ்பூர் புறவழிச்சாலை மற்றும் காங்ஷாபதி மற்றும் ஷிலாபதி ஆறுகளின் மீது கட்டப்படும் பெரிய பாலங்கள், இணைப்பை மேலும் மேம்படுத்தும். இந்தத் திட்டங்களுக்காக மேற்கு வங்கம் மற்றும் கிழக்கு இந்திய மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.நண்பர்களே,இன்று, நாட்டில் ரயில்வேயை நவீனமயமாக்குவதற்கான ஒரு விரைவான பிரச்சாரம் நடந்து வருகிறது. இந்தப் பிரச்சாரத்தில் மேற்கு வங்கம் பின்தங்கியிருக்கக்கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்! எனவே, மேற்கு வங்கத்தின் ரயில்வே உள்கட்டமைப்பை விரிவுபடுத்த மத்திய அரசு வலுவான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இன்று, கலைகுண்டா மற்றும் கனிமஹுலி பிரிவுகளில் தானியங்கி தொகுதி சமிக்ஞை அமைப்பு நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது பரபரப்பான ரயில் பாதைகளின் திறனை அதிகரிக்கும், பயணத்தை பாதுகாப்பானதாக்கும், மேலும் பயணிகளுக்கு வேகத்தையும் வசதியையும் அதிகரிக்கும்.நண்பர்களே,இன்று, காமாக்யா குடி, அனாரா, தம்லுக், ஹால்டியா, பரபும் மற்றும் சியுரி ஆகிய ஆறு நிலையங்கள் அம்ரித் நிலையங்களாகப் புனரமைக்கப்பட்டு, திறந்து வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையங்களில் வங்கத்தின் சிறந்த கலாச்சாரம் இப்போது இன்னும் பிரகாசமாக மிளிர்கிறது. இங்கு மேலும் பல நிலையங்களும் மறுவடிவமைப்பு செய்யப்பட்டு வருகின்றன. புருலியா மற்றும் ஆனந்த் விஹார் முனையத்திற்கு இடையே ஒரு புதிய எக்ஸ்பிரஸ் ரயில் சேவையும் கொடியசைத்துத் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் சேவை மேற்கு வங்க மக்களுக்கு மட்டுமல்ல, ஜார்க்கண்ட், பீகார், உத்தரப்பிரதேசம் மற்றும் டெல்லி மக்களுக்கும் பயனளிக்கும்.சாலை மற்றும் ரயில் இணைப்பு போலவே, துறைமுகங்கள் மற்றும் நீர் போக்குவரத்தும் ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது. பல தசாப்தங்களாக, இந்த விஷயத்தில் கிழக்கு இந்தியாவின் ஆற்றல் புறக்கணிக்கப்பட்டது. ஆனால் இன்று, நீர்வழிகள் வர்த்தகம் மற்றும் தொழில்துறை முன்னேற்றத்திற்கான புதிய பாதைகளைத் திறக்கின்றன. இந்த திசையில், முக்கியமான துறைமுக உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன, நிறைவடைந்தவை, தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. கொல்கத்தா மற்றும் ஹால்டியா போன்ற துறைமுகங்கள் நீண்ட காலமாக கிழக்கு இந்தியாவில் முக்கிய வர்த்தக மையங்களாக உள்ளன. ஹால்டியா கப்பல்துறை வளாகம் இயந்திரமயமாக்கப்பட்டு வருகிறது. இது சரக்கு நடவடிக்கைகளை விரைவுபடுத்தும், துறைமுக திறனை அதிகரிக்கும் மற்றும் வர்த்தகத்திற்கான புதிய வசதிகளை உருவாக்கும். கொல்கத்தா கப்பல்துறை அமைப்புமுறையில் உள்ள பாஸ்குல் பாலத்தின் புதுப்பித்தல் பணியும் நடைபெற்று வருகிறது. கிதர்பூர் கப்பல்துறையில் சரக்கு கையாளும் திறனை அதிகரிப்பதிலும் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். இந்த திட்டங்கள் அனைத்தும் கிழக்கு இந்தியாவின் தளவாட அமைப்பை வலுப்படுத்தும்.நண்பர்களே,சாலைகள், ரயில்வே மற்றும் துறைமுகங்கள் தொடர்பான இந்தப் புதிய திட்டங்கள் மேற்கு வங்கத்தின் நவீன எதிர்காலத்திற்கான புதிய பாதைகளைத் திறக்கின்றன. விவசாயிகள், வர்த்தகர்கள், தொழில்முனைவோர், மாணவர்கள் அனைவரும் பயனடைவார்கள். சுற்றுலா போன்ற துறைகளிலும் புதிய வாய்ப்புகள் உருவாகும். உள்ளூர் தொழில்கள் மற்றும் சேவைகள் வேகம் பெறும். இந்தியாவை எப்போதும் வழிநடத்தி வரும் மேற்கு வங்கம், ‘வளர்ச்சியடைந்த மேற்கு வங்கமாக’ மீண்டும் அந்த பெருமையை அடைய வேண்டும் என்பதே எங்கள் உறுதி. வலுவான இணைப்பு மற்றும் நவீன உள்கட்டமைப்பு ஒரு வளர்ந்த மாநிலத்தின் அடித்தளத்தை உருவாக்கும் என்று நான் முழுமையாக நம்புகிறேன். இந்த விருப்பத்துடன், இந்த வளர்ச்சித் திட்டங்களுக்காக உங்கள் அனைவருக்கும் மீண்டும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்போது, இந்த அதிகாரப்பூர்வ நிகழ்ச்சி முடிவடைந்தவுடன், மாநில மக்கள்  கூடியிருக்கும் திறந்தவெளி மைதானத்திற்குச் செல்வேன். மேற்கு வங்க மக்களைச் சந்தித்து அவர்களிடையே மிக முக்கியமான பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்கும் பாக்கியம் எனக்குக் கிடைக்கும். 

பி.கே.சேகர்பாபு திரு.வி.க.நகர் மண்டலத்தில் கட்டப்பட்ட பல்நோக்கு மையக் கட்டடத்தில் உள்ள நியாய விலைக் கடையினைப் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்வழிகாட்டுதலின்படி,இன்று மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும்,சென்னைப்