இங்கிலாந்து, முக்கிய ஐரோப்பிய நாடுகளில் 2024 ஆம் ஆண்டில் மின்சார வாகனங்களுடன் கால்பதிக்கவுள்ளது.
“இயக்கத்தின் எதிர்காலமாக இருத்தள்” என்ற எங்கள் நோக்கத்திற்கு ஏற்ப, ஹீரோ மோட்டோகார்ப் புத்தாக்கம் மற்றும் விரிவான ஆராய்ச்சியால் இயக்கப்படுகிறது. பிராண்ட் ஹீரோ உலகெங்கிலும் உள்ள அதன் 112 மில்லியன் வாடிக்கையாளர்களால் நம்பப்படுகிறது, மேலும் தற்போது வளர்ந்து வரும் உலகளாவிய வாடிக்கையாளருக்கு சேவை செய்யத் தயாராக இருக்கும் தொழில்நுட்ப சக்தியாக தன்னை மாற்றிக் கொள்கிறது.
“எங்கள் சுற்றுச்சூழல் நட்பார்ந்த, நிலையான பசுமை உற்பத்தி, எரிபொருள்-திறனுள்ள ICE தயாரிப்புகள் மற்றும் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட மின்சார வாகனங்கள், இந்தியா மற்றும் ஜெர்மனியில் உள்ள எங்கள் உலகத் தரம் வாய்ந்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வசதிகளில் உருவாக்கப்பட்டு வருவதன் மூலம் உலகெங்கிலும் உள்ள பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்களின் தற்போதைய மற்றும் எதிர்காலத்திய இயக்கத் தேவைகளைப் பூர்த்தி செய்ய நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.
“எங்கள் மின்சார வாகனங்களுடன் ஐரோப்பாவிற்குள் நுழைவதன் மூலம், உலகின் பிற பகுதிகளில் செய்ததைப் போலவே, இப்பகுதியில் உள்ள முக்கிய சந்தைகளில் ஹீரோ மோட்டோகார்ப் ஒரு நம்பகமான பிராண்டாக விரைவில் வெளிப்படும் என்று நான் நம்புகிறேன். எதிர்கால சந்ததியினருக்கு சுத்தமான, சமநிலை வாய்ந்த மற்றும் வாழத்தக்க கிரகத்தை வழங்குவதற்கான எங்கள் தத்துவம் எங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் மூலம் செயல்படுத்தப்படுகிறது, மேலும் இந்த தத்துவம் உலகம் முழுவதும் உள்ள எங்கள் பங்குதாரர்கள் அனைவருக்கும் எதிரொலிக்கும் என்று நான் நம்புகிறேன்.
Hero MotoCorp , செவ்வாயன்று EICMA 2023 இல் பல உத்திசார்ந்த முன்முயற்சிகளை அறிவித்தது, இதில் மின்சார இயக்கம், புதிய ICE வாகன வகைகளில் நுழைதல் மற்றும் ஐரோப்பாவிற்குள் கால்பதித்தல் ஆகியவற்றுக்கான விரிவான வளர்ச்சி திட்டங்கள் அடங்கும்.
உலகம் முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த அனுபவங்கள் மற்றும் தயாரிப்புகளை வழங்குவதற்கான தனது உறுதிப்பாட்டை உறுதிசெய்துள்ள உலகின் மிகப்பெரிய இருசக்கர வாகன உற்பத்தியாளர், EICMA கண்காட்சியான இல் மூன்று கருத்தாக்க வாகனங்களையும் உற்பத்திக்கு தயாராக உள்ள மூன்று புதிய வாகனங்களையும் வெளியிட்டது. 2024 ஆம் ஆண்டின் மையத்தல் ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து போன்ற ஐரோப்பிய சந்தைகளில் நுழைவதற்கான திட்டங்களையும் நிறுவனம் அறிவித்தது.
EICMA இல் உள்ள நிறுவனத்தின் ஸ்டாலில் உலகளாவிய ஊடகங்களுக்கு உரையாற்றிய ஹீரோ மோட்டோகார்ப்பின் தலைமை செயல் அலுவலர் திரு.நிரஞ்சன் குப்தா , “உலகம் முழுவதிலும் இருந்து வந்துள்ள எங்கள் பங்குதாரர்களுக்கு எங்களது சமீபத்திய தயாரிப்புகள் மற்றும் தொழில்நுட்பங்களை காட்சிப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். 2024 ஆம் ஆண்டின் மையத்தில் இந்த ஒவ்வொரு சந்தையிலும் வணிக நடவடிக்கைகளைத் தொடங்க UK, ஸ்பெயின் மற்றும் பிரான்சில் உள்ள மிகவும் நம்பகமான கூட்டாளர்களுடன் நாங்கள் கூட்டாண்மை மேற்கொண்டுள்ளோம்.
“நாங்கள் முதலில் இந்த நாடுகளில் எங்கள் மின்சார ஸ்கூட்டர் VIDA V1 ஐ அறிமுகப்படுத்துவோம், அதன் பிறகு அதிக திறன் கொண்ட பிரீமியம் ICE மோட்டார்சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களுடன் எங்கள் சலுகைகளை விரிவுபடுத்துவோம், அவை இங்கே காட்சிப்படுத்தப்படுகின்றன. அணுகக்கூடிய விலையில் உயர்தர தனிப்பட்ட மொபிலிட்டி தீர்வுகளை வழங்குவதில் எங்கள் நிபுணத்துவத்துடன், எங்கள் புதிய தயாரிப்புகள் புவியியல் முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களால் வரவேற்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம். “உலகிற்காக இந்தியாவில் புத்தாக்கம் மற்றும் உற்பத்தி” என்பதே எங்களின் நோக்கமாகும், மேலும் இந்த இலக்கை நோக்கி விரைவாக முன்னேற நாங்கள் அயராது உழைத்து வருகிறோம்.
காட்சிப்படுத்தப்பட்ட தயாரிப்புகள்- இக்கண்காட்சியில் Xoom 125R மற்றும் Xoom 160 ஆகிய இரண்டு புதிய ICE ஸ்கூட்டர்களை நிறுவனம் வெளியிட்டது . இரண்டு ஸ்கூட்டர்களும் விரைவில் பல புவியியல் பகுதிகளில் அறிமுகம் செய்யப்படும்.
மேலும், ஐரோப்பா மற்றும் இங்கிலாந்து சந்தைகளுக்கான VIDA V1 Pro ஐயும் வெளியிட்டது. VIDA V1 என்பது நிறுவனத்தின் முதல் மின்சார ஸ்கூட்டர் ஆகும், இது அதன் வளர்ந்து வரும் மொபிலிட்டி பிராண்டான ஹீரோவால் இயக்கப்படுகிறது VIDAவின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதிக திறன் கொண்ட பிரீமியம் மோட்டார்சைக்கிள்களின் விரிவான போர்ட்ஃபோலியோவை உருவாக்கி, அது – Concept 2.5R XTuntஐயும் வெளியிட்டுள்ளது – இது நிறுவனத்தின் ஒரு புதிய வகையாகும்.
“மொபிலிட்டியின் எதிர்காலமாக இருத்தல்” என்ற தனது தொலைநோக்கு பார்வையுடன், ஹீரோ மோட்டோகார்ப் Lynx மற்றும் Acro – ஆகிய இரண்டு EV கருத்தாக்கங்களை வெளியிட்டது. இந்த இரண்டு தயாரிப்புகளும் நகர்ப்புற இயக்கத்தில் முற்றிலும் புதியவை மற்றும் நிறுவனத்தின் ஐரோப்பிய R&D மையமான – முனிச்சிற்கு அருகே உள்ள டெக் சென்டர் ஜெர்மனியில் உருவாக்கப்பட்டது.