100-வது ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி இஸ்ரோ சாதனை

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஜிஎஸ்எல்வி/எஃப் -15 ராக்கெட் மூலம் என்விஎஸ் – 02 செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இதன் மூலம்  ஶ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக 100 ராக்கெட்டுகள் செலுத்தப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல் சாதனையை இஸ்ரோ படைத்துள்ளது.

ஆந்திர மாநிலம் ஶ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவான் விண்வெளி மையத்திலுள்ள இரண்டாவது ஏவுதளத்திலிருந்து இன்று காலை 06:23 மணிக்கு ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட என்விஎஸ் -02 செயற்கைக்கோள் அதன் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.இதன்மூலம் நேவிகேஷன் வரிசையில் 5 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ளதாகவும் இன்னும் மூன்று செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்ட பின் இந்த திட்டம் முழுமையடையும் என்று இஸ்ரோவின் புதிய தலைவராக அண்மையில் பொறுப்பேற்றுக் கொண்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த விண்வெளி விஞ்ஞானி டாக்டர் வி நாராயணன் செய்தியாளர்களிடம் கூறினார். இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி வரலாற்றில் வெற்றிகரமான 100 ராக்கெட்டுகள் எனும் சாதனை நம் நாட்டிற்கே பெருமை என்று அவர் தெரிவித்தார். இந்த சாதனைக்காக அரும்பாடுபட்ட முன்னாள் இந்நாள் விஞ்ஞானிகள், உள்ளிட்ட அனைவருக்கும் அவர் வாழ்த்து தெரிவித்தார்.

இதுவரை, 500-க்கும் அதிகமான செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியுள்ளதாக தெரிவித்த அவர், இதில் 400-க்கும் அதிகமான வெளிநாட்டு செயற்கைக்கோள்களும் அடங்கும் என்றார்.இஸ்ரோவின் அடுத்தடுத்த திட்டங்கள் குறித்து விளக்கிய அவர், அண்மையில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கிய ஶ்ரீஹரிகோட்டாவின் மூன்றாவது ஏவுதளம் இன்னும் நான்கு ஆண்டுகளில் பயன்பாட்டுக்கு வரும் என்றார்.இஸ்ரோ மற்றும் அமெரிக்காவின் நாசா கூட்டு ஆராய்ச்சியில் தயாராகி வரும்  செயற்கைக்கோள் நிசார் விரைவில் விண்ணில் செலுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.அடுத்த தலைமுறை ராக்கெட் கட்டுமானம், ககன்யான் திட்டம், சந்திரயான் 4, 5 திட்டம், இந்தியாவின் சொந்த விண்வெளி மையம் அமைத்தல் ஆகியவை அடுத்தடுத்து செயல்படுத்தப்படும் என்று கூறிய அவர், ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள திட்டங்கள் முன்னுரிமை அடிப்படையில் விரைந்து செயல்படுத்தப்படும் என்றார்.

இந்திய விண்வெளித் துறை தற்சார்பை நோக்கி முன்னேறி வருவதாக தெரிவித்த டாக்டர் வி நாராயணன், வளர்ச்சியடைந்த இந்தியா எனும் இலக்கை எட்ட இஸ்ரோ சிறப்பாக பங்காற்றும் என்றார். இந்த ஆண்டு மேலும் பல செயற்கைக்கோள் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.