11 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்: போலி மந்திரவாதி கைது

. தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்க தனி அறையில் வைத்து பூஜை நடத்த வேண்டும் என்று கூறி 11 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட போலி மந்திரவாதியை போலீசார் கைது செய்தனர்.

♦️. கேரள மாநிலம் கொல்லம் முண்டக்கல் என்ற பகுதியை சேர்ந்தவர் ஷினு (38). இவர் சங்கு ஜோதிடம் என்ற பெயரில் தன்னுடைய வீட்டில் வைத்து பேய் விரட்டுவது உள்ளிட்ட மந்திரவாதங்களை செய்து வருகிறார். கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து இங்கு தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொல்லத்தை சேர்ந்த ஒரு பெண், மந்திரவாதி ஷினுவை சந்தித்து தன்னுடைய 11 வயது மகளுக்கு சரியாக படிப்பு வரவில்லை என்றும், அதற்கு ஏதாவது பூஜை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதற்கு மறுநாள் மகளை அழைத்து வருமாறு மந்திரவாதி கூறினார்.

♦️. இதன்படி அந்த பெண் தன்னுடைய மகளை அழைத்து கொண்டு மந்திரவாதி ஷினுவை சந்திப்பதற்காக சென்றார். அப்போது மகளை தனி அறையில் வைத்து பூஜை செய்ய வேண்டும் என்று ஷினு கூறினார். இதைத்தொடர்ந்து மகளை மந்திரவாதியின் அறைக்கு அனுப்பி வைத்து அந்தப் பெண் வெளியே காத்திருந்தார். சுமார் 1 மணி நேரம் கழித்து பயத்துடன் வெளியே வந்த அந்த சிறுமி, மந்திரவாதி தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக தாயிடம் கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த தாய் உடனடியாக கொல்லம் கிழக்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மந்திரவாதி ஷினுவை கைது செய்தனர். தொடர்ந்து அவரது வீட்டில் நடத்திய சோதனையில் பூஜை அறையில் இருந்து ஏராளமான அரிவாள், பிரம்பு மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

♦️. பேய் விரட்டுவதாக கூறி இவர் பாதிக்கப்பட்டவர்களை பிரம்பால் அடித்து துன்புறுத்தியதாகவும், பல பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.