4,861 புகார்கள், 8050 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை, முதியோர், கர்ப்பிணிகளுக்கு பிக்கப் டிராப் வாகனம் : நாடாளுமன்ற தேர்தல் 2024

மக்களவை தேர்தலையொட்டி தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாடிகளில் 8050 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை, என்றும், தேர்தல் தொடர்பாக இதுவரை 4861 புகார்கள் வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ள  தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு,  கர்ப்பிணிகள், மாற்றுத்திறநாளிகள், முதியோர்கள் வாக்களிக்கும் வகையில், பிக்கப் டிராப் வசதி செய்து தரப்படும் என்றும் கூறினார்.

நாட்டின்  18வது மக்களவை அமைக்கப்படுவதற்காக மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல்கட்டமாக  ஏப்ரல் 19 தொடங்கி ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது.  அதன்படி, தமிழகம், புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில்  முற்கட்ட  பாராளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19-ந் தேதியான நாளை  வாக்குப்பதிவு  நடை பெறுகிறது. அன்றைய தினமே தமிழகத்தில் காலியாக உள்ள விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெறுகிறது.

இந்த நிலையில், தேர்தல் பணிகள் தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு, தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுக்காக மொத்தம் 68 ஆயிரத்து 320 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இவற்றில், 8050 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளதாகவும்,  மிகவும் பதற்றமானவையாக 181 வாக்குச்சாவடிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.  அங்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலில் 39 தொகுதிகளில் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 950 வேட்பாளர்களில் 874 பேர் ஆண் வேட்பாளர்கள், 76 பேர் பெண் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தமிழ்நாட்டில் 6.3 கோடி வாக்காளர்கள் உள்ளனர். 18- 19 வயதுடைய வாக்காளர்கள் 10.92 லட்சம் பேர் உள்ளனர்.

மக்களவை தேர்தலையொடிடி, 3,32,000 தேர்தல் பணியாளர்கள் ஈடுபட உள்ளனர். தேர்தலையொடிடி,ட  39 பொது பார்வையாளர்கள், 58 செலவின பார்வையாளர்கள் பணியில் உள்ளனர்.  மேலும், மாநிலம் முழுவதும் 190 கம்பெனி துணை ராணுவ படையினர் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 15 கம்பெனி துணை ராணுவத்தினர் வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள்.

இதையொட்டி, வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், வாக்குச்சாவடிகளுக்கு தேர்தல் அலுவலர்களும், பாதுகாப்பு பணிகளுக்கு காவலர்களும் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததில் இருந்து இதுவரை, தேர்தல் ஆணையத்தின் சிவிஜில் செயலி மூலம் 4861 புகார்கள் வந்துள்ளன. ரூ.173.58 கோடி பணம், ரூ.6.67 கோடி மதிப்புள்ள மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ரூ.1,083 கோடி மதிப்பிலான நகை மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

நாளை வாக்குப்பதிவினையொட்டி,  1,58,568 மின்னணு வாக்கு இயந்திரங்களும்,  81,157 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 86,858 விவிபாட் இயந்திரங்களும் தயார் நிலையில் வைக்கப் பட்டுள்ளன.  அவை வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

வாக்காளர்கள் காலை 7மணி முதல் தங்களது வாக்கினை செலுத்தலாம். மாலை 6மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்றவர்,  மாலை 6 மணி வரை  வாக்குச்சாவடியில் வரிசையில் நிற்கும் கடைசி வாக்காளர் வரை அனைவரும் வாக்களிக்கும் வகையில் முமையான வாய்ப்பு வழங்கப்படும் என்றார்.

மேலும், மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள், கர்ப்பிணிகள் வாக்களிக்கு ஏதுவாக வாக்குச்சாவடிகளில் வசதிகள் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்தவர்,  மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள், கர்ப்பிணிகள் 1950 என்ற தேர்தல் ஆணைய உதவி எண்ணுக்கு அழைப்பு விடுத்தால், அவர்கள் வாக்களிக்கும் வகையில், இலவச வாகன வசதி செய்து தரப்படும், அவர்களை அழைத்துவந்து, அவர்கள் வாக்களித்தவுடம் வீட்டில் கொண்டு விடும் வகையில், இலவச வாகனம் அனுப்பி வைக்கப்படும் என்றார். மாற்று திறனாளிகள் வாக்களிக்க வாக்குச்சாவடிகளில் சாய்வுதளம், சக்கர நாற்காலி வசதி செய்யப்பட்டுள்ளன. வாக்காளர் அட்டை இல்லை என்றாலும் கூடுதலாக 12 ஆவணங்களை காண்பித்து வாக்களிக்கலாம். இவ்வாறு கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச