சென்னை, ஜூலை 29:
பி.எஸ்.எல்.வி& சி56 ராக்கெட் சிங்கப்பூரின் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளாக டிஎஸ் – சாரை சுமந்துக்கொண்டு நாளை (30ம் தேதி) விண்ணில் செலுத்தப்பட உள்ளது. ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருக்கும் முதலாம் ஏவுதளத்தில் இருந்து காலை 6.30 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிற்வனம் பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி, எல்எம்வி ஆகிய ராக்கெட்டுகள் மூலம் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது. இது தவிர வணிக ரீதியாகவும் இஸ்ரோ செயற்கைக்கோள்களை செலுத்தி வருகிறது. கடந்த ஜூலை 14ம் தேதி உலகே உற்றுநோக்கிய சந்திரயான் 3 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. சந்திரயான் 3ன் நிலவு பயணம் இன்னும் தொடர்ந்து வரும் நிலையில், ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் சந்திரயான் 3 நிலவில் தரையிறங்கும் என இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூருக்குச் சொந்தமான டிஎஸ்-சார் எனும் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதற்கு இஸ்ரோவின் என்எஸ்ஐஎல் (Newspace India Limited) நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் நாளை சிங்கப்பூரில் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான டிஎஸ்-சார் உடன் 6 செயற்கைக்கோள்கள் சுமந்து பிஎஸ்எல்வி சி 56 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்படும் என இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதில் டிஎஸ் -சார் செயற்கைக்கோளை முதன்மையாக கொண்டுள்ளது. இந்த செயற்கைக்கோள் 360 கிலோ எடை கொண்டுள்ளது. மேலும், சிந்தடிக் அப்ரேச்சர் ரேடார் தொழில்நுட்பத்தில் செயல்படக்கூடியது. அதாவது பகல் இரவு என அனைத்து காலங்களிலும் துல்லியமாக புகைப்படங்கள் எடுக்கும் தன்மை கொண்டது. இத்துடன் வெலாக்ஸ் ஏ.எம்-23 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோள், ஆர்கேட், ஸ்கூப் -2, நல்லியன், கலேசிய 2, ORB 12 STRIDER ஆகிய 6 செயற்கைக்கோள்களை சுமந்து செல்கிறது. இந்த 7 செயற்கைக்கோள்களும் தொழில்நுட்ப பணிகளுக்கு பயன்படுத்தப்படும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் :55 வாழ்க்கைத் துணைநலம்பால்: அறத்துப்பால்குறள்: தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்பெய்யெனப் பெய்யும்






