தருமபுரி:
இந்து சமய அறநிலையத்துறை அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தருமபுரி மாவட்டத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறையில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த தமிழக அரசு பணிக்கு என மொத்தம் 7 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் தற்போது முடிவடைய உள்ளதால், தகுதியானவர்கள் உடனே இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
அலுவலக உதவியாளர் பதவிக்கு என 7 பணியிடங்கள் காலியாக உள்ளன. 01.01.2023 அன்று விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 18 வயது மற்றும் அதிகபட்சம் 32 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும். எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள ஆர்வம் உள்ளவர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 11.03.2023 மாலை 5.30 மணிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு