சாலை வெட்டுப் பணிகளை ஆய்வு செய்தார் ஜெ.ராதாகிருஷ்ணன்..

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை வெட்டுப் பணிகள் மற்றும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது குறித்த சேவைத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், தலைமையில் 25.07.2023 ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் பேசும்போது
தெரிவித்ததாவது :

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் பாதாளச் சாக்கடை குழாய், குடிநீர் குழாய் பதித்தல், மழைநீர் வடிகால்கள் அமைத்தல், மின்துறை பணிகள், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படும் போது ஏற்படுகின்ற சாலை வெட்டுக்களை அந்தப் பணிகள் முடிவுற்றவுடன் உடனடியாக சாலை சீரமைக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். தொடர்புடைய துறைகளுடன்
ஒருங்கிணைந்து, பொதுமக்களுக்கு இடையூறின்றி பணிகளை விரைந்து முடித்திட வேண்டும்.

அனுமதியின்றி சாலை வெட்டுக்களை தன்னிச்சையாக மேற்கொள்ளக் கூடாது. மாநகராட்சியிடம் உரிய அனுமதியைப் பெற்றவுடன் தான் சாலை வெட்டுக்களை மேற்கொள்ள வேண்டும். குடிநீர் குழாய் சாலை வெட்டுக்களை மேற்கொள்ளும் போது அனுமதி பெற்று மேற்கொள்ள வேண்டும். சாலைகளில் உள்ள பள்ளங்களையும் சீர்செய்யும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படும் பொழுது பணிகள் தொடங்கப்பட்ட நாள் மற்றும் முடிவுறும் நாள் ஆகியவற்றை விளம்பரப் பலகைகளை அமைத்து
பொதுமக்களுக்கு தெரியும் வகையில் விளம்பரப்படுத்த வேண்டும். மேலும், சாலை வெட்டுப் பணிகள் மேற்கொள்ளும் போது உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடனும், போக்குவரத்திற்கு நெரிசல் ஏற்படாத வகையிலும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தன்னிச்சையாக
வாகனங்களை நிறுத்தியுள்ளவர்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டு, அந்த வாகனங்களை கைப்பற்ற வேண்டும். மேலும், கேட்பாரற்று நீண்ட நாட்களாக பயன்பாட்டில் இல்லாத வாகனங்களை அகற்றி நடவடிக்கை மேற்கொள்வதோடு, எளிதான போக்குவரத்திற்கு வழிவகை செய்திட வேண்டும்.

பருவமழைக்கு முன்னதாக பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை முடித்திட வேண்டும். விடுபட்ட மழைநீர் வடிகால் இணைப்புப் பணிகளையும் உரிய துறைகளுடன் ஒருங்கிணைந்து முடித்திட வேண்டும் என கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் அவர்கள்
அறிவுறுத்திப் பேசினார். இக்கூட்டத்தில் சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் ஆர்.கிர்லோஷ் குமார், இணை ஆணையாளர் (பணிகள்) ஜி.எஸ்.சமீரன், தெற்கு வட்டார துணை ஆணையாளர் எம்.பி.அமித், போக்குவரத்து காவல் துணை ஆணையாளர் (கிழக்கு) சமே சிங் மீனா, மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.