மூன்றாம் நிலை முதல் ஆறாம் நிலை வரையிலான சிறு நகரங்கள் முதல் சிறு கிராமப் பகுதிகள் வரை அதிக கவனம் செலுத்தி நாட்டில் இப்பகுதிகளில் ஏடிஎம் சேவைகளை அதிகரிக்க, வங்கி சாரா நிறுவனங்கள் நாட்டில் ஒயிட் லேபிள் ஏடிஎம்-களை (டபிள்யூ.எல்.ஏ) அமைக்கவும், இயக்கவும் ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அனுமதித்துள்ளது.
வங்கிகள் வழங்கும் அட்டைகளின் (டெபிட் / கிரெடிட் / ப்ரீபெய்ட்) அடிப்படையில் இந்தியாவில் உள்ள வங்கிகளின் வாடிக்கையாளர்களுக்கு டபிள்யூ.எல்.ஏ-க்கள் வங்கி சேவைகளை வழங்குகின்றன. பணத்தை விநியோகிப்பதைத் தவிர, டபிள்யூ.எல்.ஏக்கள் பிற சேவைகள் மற்றும் வசதிகளை வழங்கும். கணக்குத் தகவல், ரொக்கப் பணம் செலுத்துதல், வழக்கமான, மினி அறிக்கை, பின் எண் மாற்றம், காசோலை புத்தகத்திற்கான கோரிக்கைபோன்றவற்றை இந்த டபிள்யூ.எல்.ஏ-க்கள் வழங்கும்.
டபிள்யூ.எல்.ஏ.க்களின் எண்ணிகையை அதிகரிப்பதற்கும், அவற்றின் நம்பகத்தன்மை மற்றும் செயல்பாட்டை மேம்படுத்துவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
நாட்டில் நான்கு அங்கீகரிக்கப்பட்ட வங்கி சாரா நிறுவனங்கள் ஒயிட் லேபிள் ஏடிஎம்-களை இயக்குகின்றன.
மத்திய நிதித்துறை இணையமைச்சர் திரு பகவத் கிசான் ராவ் கரத் இன்று மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.