இந்தியா ,கேரளா, மட்டும் பல்வேறு நாடுகளில் வாகன சோதனைச்சாவடி லஞ்சம் பெருகி வருவதாக தகவல் வெளிவந்துள்ளது.இந்நிலையில் இதற்கு பதில் தரும் விதமாக கேரளா லஞ்ச ஒழிப்பு காவல் துறையின் காணொளி ஒன்று வைரலாகி வருகிறது.அதில் பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் சரக்கு லாரிகள் மற்றும் வாகனக ஓட்டிகள் சுங்கச்சாவடியில் ,பணம் வசூலிப்பதாக கேரளா லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தகவல் கிடைத்தது.
அதனை ஆய்வு செய்வதற்கு நேரடியாக சென்ற லஞ்ச ஒழிப்புத்துறையினர் , சோதனையை மேற்கொண்டனர். அப்பொழுது காணொளி ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி ,பணம் தரும் வாகன ஓட்டிகளிடம்,நீங்கள் தரும் பணமானது லஞ்சத்திற்கு சமம்,எனவே அதை நீங்கள் தரவேண்டாம் என்றும், தாங்கள் ஏற்றி வரும் சரக்கு பொருட்களுக்கும் வரிகளை கூறியும்,தெளிவுபடுத்தியதாக அக்காணொளியில் பதிவாகியுள்ளது .
இக்காணொளியானது ,தற்போது வைரலாகி வரும் நிலையில் ,கேரளா லஞ்ச ஒழிப்பு காவல் துறையினருக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.