அண்மை செய்தி
கடந்த ஆண்டை விட 15.4% அதிகரித்த ஜிஎஸ்டி வசூல் ரேஷன் கார்டு விரல் ரேகை பதிவு செய்யவில்லையா? -இன்று! சிறப்பு முகாம் முதல்வர் அலுவலகம் இடமாற்றப் பணிக்கு ரூ.11 கோடி ஒதுக்கீடு கேரள மழைக்கு 8 பேர் பலி; சபரிமலைக்கு பக்தர்கள் செல்ல தடை மேகதாது அணைத் திட்டம் மற்றும் காவிரி நீர் உரிமை தொடர்பான விவகாரத்தில் புதிய தமிழகம் கட்சி ஏற்பாடு செய்திருந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழகத்தின் நீர்வள உரிமை குறித்துக் காரசாரமான கேள்விகளை எழுப்பியுள்ளார் தி.மு.க.வில் தோப்பு வெங்கடாசலம் பதவி பறிப்பு: த.வெ.க.வில் இணைகிறாரா?

ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு தடை விதிப்பு

புதுடெல்லி, ஆக.4:
அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது ‘மோடி’ பெயர் தொடர்பாக கூறிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. இதுதொடர்பான வழக்கில் அவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்ப்டடது. ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனையை பின்னர் சூரத் மாவட்ட கோர்ட்டும் உறுதி செய்தது. இந்த தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை குஜராத் ஐகோர்ட்டும் தள்ளுபடி செய்தது.
ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனை சட்டரீதியாக சரிதான் எனக்கூறிய நீதிபதி, அதை நிறுத்தி வைக்க எவ்வித முகாந்திரமும் இல்லை என்றும் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து ராகுல் காந்தி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில் சூரத் கோர்ட்டு வழங்கிய தண்டனைக்கு தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
“அதிகபட்ச தண்டனை காரணமாக தனிநபரின் உரிமை மட்டுமல்லாமல் தொகுதி மக்களின் உரிமையும் பாதிக்கப்படுகிறது; இந்த வழக்கில் ஒரு தொகுதியின் பிரதிநிதித்துவம் இல்லாமல் போகும் அளவிற்கு இந்த வழக்கு பொருத்தமானதா?
ஒரு ஆண்டு 11 மாதம் தண்டனை வழங்கப்பட்டிருந்தால் ராகுல் காந்தி தனது எம்.பி பதவியை இழந்திருக்க மாட்டார். ராகுல்காந்திக்கு அதிகபட்ச தண்டனை விதிக்கப்பட்டது ஏன்? அவதூறு வழக்கை ஒழுக்க கேடாக கருதி, ஆதாரமின்றி சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது என சுப்ரீம் கோர்ட்டு கருத்து தெரிவித்து உள்ளது.

தமிழ் தேசியம் என்பது மொழி, இன உரிமை என பன்மைத்துவம் கொண்டது: திருமாவளவன்

கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் வருகிற ஆகஸ்ட் 17-ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி

திருவள்ளூர் கோர்ட் வாசலில் ரவுடியை கொல்ல முயற்சி: கவுன்சிலரின் கணவர் உட்பட 6 பேர் கைது

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் பகுதியை சேர்ந்தவர் ஜோசப். அந்த பகுதியில் ரவுடியான வலம்

ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு தடை விதிப்பு

தமிழ் தேசியம் என்பது மொழி, இன உரிமை என பன்மைத்துவம் கொண்டது: திருமாவளவன்

கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் வருகிற ஆகஸ்ட் 17-ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி

திருவள்ளூர் கோர்ட் வாசலில் ரவுடியை கொல்ல முயற்சி: கவுன்சிலரின் கணவர் உட்பட 6 பேர் கைது

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் பகுதியை சேர்ந்தவர் ஜோசப். அந்த பகுதியில் ரவுடியான வலம்