அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் தமிழின் பெருமிதம் கவிப்பேரரசு வைரமுத்து தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது. ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் யூடியூப் பார்த்து நாட்டுத் துப்பாக்கி தயாரித்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டார்

டெல்டா பாசனத்துக்கான நீரை கர்நாடகாவிடமிருந்து பெற்றுத்தறாவிட்டால் போராட்டம்: எடப்பாடி பழனிசாமி

சென்னை:
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரியில் தமிழகத்திற்கு உரிய பங்கினை பெறுவதற்காக புரட்சித் தலைவர் எம்ஜிஆரும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் தொடர்ந்து, எனது தலைமையிலான அதிமுக அரசும் மேற்கொண்ட தொடர் சட்ட நடவடிக்கைகளின் காரணமாக 40 ஆண்டுகளுக்குப் பிறகு உச்சநீதிமன்றம் 16.2.2018 அன்று இறுதித் தீர்ப்பினை அளித்தது. அதன் அடிப்படையில் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவினை மத்திய அரசு 1.6.2018 அன்று அமைத்தது.இதன்படி மாதாந்திர அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் கர்நாடகா, தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. நீரை வழங்க வேண்டும்.
பல்வேறு சட்டப் போராட்டங்களை நடத்தி, காவிரியில் உள்ள நமது உரிமையை மீட்டது அதிமுகவின் 31 ஆண்டு கால அரசு. காவிரி நதிநீர் தொடர்பாக கர்நாடகாவிற்கும், தமிழகத்திற்கும் இருந்த ஒப்பந்தத்தை புதுப்பிக்காமல் தமிழகத்தை வஞ்வித்தது தி.மு.க. அரசு. 1974ல் காவிரி ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டிருந்தால், நமக்கு 500 டி.எம்.சிக்கும் குறையாமல் தண்ணீர் வந்திருக்கும். திமுகவினர் நடத்திய மக்கள் விரோத ஆட்சியால் நாம் 1974 வரை பெற்று வந்த பங்கில் பாதிக்கு மேல் இழந்துள்ளோம்.
காவிரி பிரச்சையில் சட்டப் போராட்டத்தில் நாம் வென்றது மட்டுமல்ல, ஆண்டுதோறும் நமக்கு உண்டான பங்கினை இதுநாள் வரை பெற்று வந்தேதாம். ஆனால் திமுக அரசினுடைய கூட்டாளிக் கட்சியான காங்கிரஸ், கர்நாடகாவில் ஆட்சியைப் பிடித்தது முதல் மீண்டும் காவிரி நீர் விஷயத்தில் பிரச்சனைகளை உருவாக்கி வருகிறது. கர்நாடகத்தில் உள்ள தங்கள் குடும்பத் தொழில்கள் பாதிக்கப்பட்டுவிடுமோ என்ற பயத்தில் காவிரி நீரில் தமிழகத்திற்குரிய பங்கை அந்த அரசோடு வாதாடி, போராடி வாங்காமல், மத்திய நீர்வளத் துறை அமைச்சருக்கும், பிரதமருக்கும் கடிதம் எழுதுவதாக இந்த பொம்மை முதலமைச்சர் நாடகமாடி வருவது கண்டிக்கத்தக்கது.
கடந்த வாரம் டெல்லிக்குச் சென்ற தமிழக நீர்வளத்துறை அமைச்சர், இந்த திமுக அரசின் முதலமைச்சர் எழுதியதாகக் கூறி, மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சரிடம் ஒரு கடிதத்தை கொடுத்துள்ளார். ‘தமிழகத்திற்குரிய நீரை காவிரியல் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் மூலம் உத்தரவிடப்படும்’ என்று மத்திய அமைச்சர் உறுதி அளித்ததாக திமுக அரசின் நீர்வளத்துறை அமைச்சர் டெல்லியில் பேட்டி அளித்தார்.
இந்தநிலையில் பிரதமருக்கு இதே பிரச்சனை குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருப்பதாக அரசின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
தன்னாட்சி அதிகாரம் கொண்ட உச்சநீதிமன்றத்தின் நேரடி கட்டுப்பாட்டில் அமைக்கப்பட்டுள்ள காவிரி மேலாண்மை ஆணையக் கூடடம் உடனடியாக கூட்டப்பட்டு, தண்ணீரை பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். காவிரி மேலாண்மை ஆணையத்தின் வழிகாட்டுதலையும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளையும் நிறைவேற்ற வேண்டியது கர்நாடக அரசின் கடமை. அந்தக் கடமையில் இருந்து அரசியல் காரணங்களுக்காக நழுவும் அந்தமாநில காங்கிரஸ் அரசை தட்டிக் கேட்க வேண்டியதும், கண்டிக்க வேண்டியதும், வற்புறுத்தி நம்முடைமய பங்கு நீரைப் பெற வேண்டியதும் காங்கிரஸ் கூட்டாளியான தி.மு.க. ஆட்சியின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உரிமையும், பொறுப்புமாகும்.
ஜூன் 12ம் தேதி வழக்கப்பட்டி மேட்டூரில் இருந்து தண்ணீர் திறந்துவிட்டோம் என்று வீண் ஜம்பம் காட்டிய இந்த முதலமைச்சர், அந்தத் தண்ணீர் டெல்டா குறுவை சாகுபடிக்கு போதுமானதா? கடைமடை வரை முழுமையாக, போதுமான அளவில் தண்ணீர் சென்று சேர்கிறதா? குறுவை சாகுபடி முறையாக நடந்ததா? நிர்ணயிக்கப்பட்ட அளவு சாகுபடி செய்யப்பட்டதா? என்பது பற்றியெல்லாம் தெரிந்துகொள்ளாமல், நானும் ஒரு டெல்டாகாரன் என்று வீண் ஜம்பம் அடித்துக் கொண்டே காலத்தை ஒட்டி, டெல்டா விவசாயிகளை வஞ்சிக்கும் வேலையை கனக் கச்சிதமாக இந்த முதலமைச்சர் செய்து வருகிறார்.
எனது தலைமையிலான அம்மா அரசின் சார்பில் மக்கள் நலனுக்காக மத்திய அரசுக்கு கடிதம் எழுதும்போதெல்லாம் கேலியும், கிண்டலும் பேசிய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், முதலமைச்சர் ஆனபின் எடுத்ததெற்கெல்லாம் பிரதமருக்கும், மத்திய அமைச்சர்களுக்கும், ஜனாதிபதிக்கும் கடிதம் எழுதி சாஸ்டாங்கமாக காலில் விழுந்து கிடக்கும் கொத்தடிமைகளின் தலைவராக விளங்குவதன் மர்மம் என்ன?
கர்நாடக மாநில நீர்பாசனத்துறையும், துணை முதலமைச்சர் சிவக்குமாரும் மேகதாதுவின் குறுக்கே அணை கட்டுவதற்காக நில அளவீடு செய்ய ஆட்களை நியமித்துள்ளதாக நாளிதழ்களிழும், ஊடகஙகளிலும்செய்திகள் வந்துள்ளன. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. உடனடியாக இந்த தி.மு.க. அரசு, கர்நாடக மாநில அரசு மேற்கொள்ளும் நில அளவைப் பணிகளை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிடில் தமிழகம் பாலைவனமாக மாறிவிடும் என்று எச்சரிக்கிறேன்.
தற்போது கர்நாடக ஆணைகளில் 80 சதவீதத்திற்கு மேலான அளவில் தண்ணீர் உள்ள நிலையில், தமிழக மக்களின் காதுகளில் பூ சுற்றும் வேலையை இத்தோடு நிறுத்திவிட்டு உடனடியாக முதல்வர் மு.க.ஸ்டாலின், பெங்களூரு சென்று உங்களது கூட்டணியில் உள்ள துணை முதலமைச்சர் சிவக்குமாருடன் பேசி, வற்புறுத்தி, உடனடியாக ஜூன் மாதம் 9.190 டி.எம்.சி., ஜூலை மாதம்31.240 டி.எம்.சி., ஆகஸ்ட் மாதம் 45.950 டி.எம்.சி. ஆக மொத்தம் 46.380 டி.எம்.சி. தண்ணீரை விரைந்து பெற்று தற்போது டெல்டா மாவட்டங்களில் தண்ணீர் பற்றாக்குறையால் சுமார் 3.5 லட்சம் ஏக்கரில் கருகிக் கொண்டிருக்கும் குறுவை நெல் பயிரைக் காப்பாற்ற வேண்டும். இதனை மறுத்தால் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் டெல்டா விவசாயிகளை ஒன்றிணைத்து தீவிரமாக போராட்டத்தில் களமிறங்குவோம் என்று எச்சரிக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யூடியூப் பார்த்து நாட்டுத் துப்பாக்கி தயாரித்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டார்

பாலகுரு தனது வீட்டின் அருகே உள்ள விளைநிலங்களில் அணில் வேட்டையாடுவதற்காக, யூடியூப் வீடியோக்களைப்

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி கேத் லேப் மற்றும் உயர் தொழில்நுட்ப சிடி ஸ்கேன் திறந்து வைக்கப்பட்டது

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.12.46 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கேத்

வீட்டுமனைப் பாட்டாக்களை மாண்புமிகு தமிழ்நாடுமுதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள்இன்று கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில்பெருநகர