மதுரை அ.தி.மு.க. மாநாடு-: சென்னையில் இருந்து நாளை 1200 பேருடன் சிறப்பு ரெயில் பயணம்

சென்னை:
அ.தி.மு.க. சார்பில் மதுரையில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பிரம்மாண்ட மாநாடு 20-ந்தேதி நடைபெறுகிறது. எடப்பாடி பொதுச் செயலாளராக பதவி ஏற்ற பிறகு அதிமுகவை விரிவாக்கம் செய்யவும், கட்சியினரை ஒன்றுதிரட்டவும் இந்த மாநாட்டை வரலாற்று சிறப்புமிக்க மாநாடாக மட்டுமின்றி அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும் மாநாடாக நடத்தி முடிக்க வேண்டும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டார்.
கடந்த ஒரு மாதமாக இதற்கான ஏற்பாடுகள் முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்களிடம் பிரித்து கொடுக்கப்பட்டு இரவு-&பகலாக நடந்து வருகிறது. மாநாட்டில் 15 லட்சம் தொண்டர்கள் பங்குபெற வேண்டும் என்ற இலக்கின் அடிப்படையில் அனைத்து மாவட்ட செயலாளர்களும் வாகனங்களை ஒழுங்கு செய்துள்ளனர். பஸ், வேன், கார்களில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து 50 ஆயிரம் பேர் செல்வதற்கு ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், பாலகங்கா, ஆதிராஜாராம், டி.ஜி.வெங்கடேஷ் பாபு, ஆர்.எஸ். ராஜேஷ், தி.நகர் சத்யா, வி.என்.ரவி, அசோக் ஆகியோர் சென்னையில் இருந்து தொண்டர்களை அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தி.நகர் சத்யா மற்றும் ஆர்.எஸ்.ராஜேஷ் ஆகியோர் தனியாக சிறப்பு ரெயில் ஒன்று ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்த ரெயில் குளுகுளு வசதியுடன் 3-ம் வகுப்பு படுக்கை பெட்டிகளாக விடப்பட்டுள்ளது. இதற்காக சிறப்பு அனுமதி பெற்று ஐ.ஆர்.டி.சி. மூலம் புக்கிங் செய்யப்பட்டுள்ளது. 1,200 பேர் இதில் பயணம் செய்கிறார்கள். 14 ஏ.சி. பெட்டிகளும், ஒரே ஒரு சாதாரண 2-ம் வகுப்பு படுக்கை வசதி பெட்டியுடன் நாளை (19-ந் தேதி) இரவு 10 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்படுகிறது.
இந்த சிறப்பு ரெயிலுக்கான முழு தொகையும் 2 மாவட்ட செயலாளர்கள் செலுத்தியுள்ளனர். இதேபோல மாநாடு முடிந்து இரவு 10 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலையில் எழும்பூர் வந்து சேருகிறது.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க.வினர் அணிவகுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இது போன்ற சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளதாக மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் தெரிவித்தார். மேலும் சிறப்பு ரெயில் தவிர பிற ரெயில்களிலும் அ.தி.மு.க.வினர் மதுரை செல்ல ஒரு மாதத்திற்கு முன்பே முன்பதிவு செய்துள்ளனர். தென் சென்னை, வடக்கு (கிழக்கு) மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம் ஏற்பாட்டில் 4 பஸ்கள், 30 வேன்கள், 98 கார்களில் பயணம் செய்கிறார்கள். மாவட்ட செயலாளர் பாலகங்கா தலைமையில் 8 பஸ்கள், 20 வேன்கள் மற்றும் ரெயில்களில் தொண்டர்கள் செல்கிறார்கள்.

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு