குரோம்பேட்டை:
சென்னை குரோம்பேட்டை பகுதியை சேர்ந்த மாணவர் ஜெகதீஸ்வரன் நீட் தேர்வில் இரண்டு முறை தோல்வி அடைந்த விரக்தியில் தற்கொலை செய்துகொண்டார். இதனால் மனமுடைந்த அவரது தந்தையும் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
எனவே நீட் என்ற உயிர்க்கொல்லி நோயை விரட்டியடித்திட நீட் தேர்வை (மருத்துவ நுழைவுத் தேர்வு) ரத்து செய்ய நடவடிக்கை எடுக்காத ஒன்றிய அரசையும், தமிழ்நாடு ஆளூநர் ரவியையும் கண்டித்து
செங்கல்பட்டு வடக்கு மாவட்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் வடக்கு மாவட்ட செயலாளர் மா.வை.மகேந்திரன் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மல்லை சத்யா, பல்லாவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இ கருணாநிதி, மனித நேய மக்கள் கட்சி மாநில துணை பொது செயலாளரும், தாம்பரம் மாமன்ற உறுப்பினருமான யாகூப், தாம்பரம் மாநகராட்சி பல்லாவரம் 2 மண்டல குழு தலைவர் ஜோசப் அண்ணாதுரை, இந்திய தேசிய காங்கிரஸ் மாவட்ட தலைவரும் தாம்பரம் மாமன்ற உறுப்பினருமான செந்தில் குமார், இந்திய கம்யூனிஸ்டு கட்சி தாம்பரம் மாமன்ற உறுப்பினர் விஜயலட்சுமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் தேவ அருட்பிரகாசம், விடுதலை சிறுத்தைகள் கட்சி திருநீர்மலை தமிழரசன், தமிழக வாழ்வுரிமை கட்சி பொறுப்பாளர் முருகன், ம.ம.க. மாவட்ட தலைவர் ஜாகீர் உசேன், மருத்துவ கல்லூரி மாணவர் பயாசுதீன், மதிமுக மாவட்ட பொருளாளர் நாராயணன், மதிமுக மாவட்ட துணை செயலாளர் குரோம்பேட்டை நாசர், முடிச்சூர் ஜெயசீலன், மலர்க்கொடி, பாபு, மார்டீன், கோபிநாத், முகவை, சொக்கலிங்கம் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். குரோம்பேட்டை இந்திராநகர் தவசி நன்றி கூறினார்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
கடவுள் வாழ்த்து கடவுளை வாழ்த்துதல் குறள் 7: தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்






