17. அழுக்காறாமை
===================
அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்றார்
வழுக்கியும் கேடீன் பது.
விளக்கம்:
பொறாமை உள்ளவர்க்கு வேறுபகை தேவையில்லை. தவறாமல் அவருக்குக் கேடு வருவதற்கு அந்தப் பொறாமை ஒன்றே போதும். வேறு கேடு எதுவும் பகைவர் செய்ய வேண்டியதில்லை.