சென்னையில் நடக்கும் சாலை பணிகளை அதிகாலை 1.30 மணிக்கு அதிகாரிகளுடன் மேயர் பிரியா திடீர் ஆய்வு

சென்னை:
பெருநகர சென்னை மாநகராட்சியில் நடைபெற்று வரும் சாலைப் பணிகளை மாண்புமிகு மேயர் திருமதி ஆர். பிரியா 11ம் தேதி அதிகாலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பெருநகர சென்னை மாநகராட்சியில், நகர்ப்புர உட்கட்டமைப்பு நிதி , சேமிப்பு நிதி மற்றும் சிங்கார சென்னை 2.0 ஆகிய திட்டங்களின் கீழ் ரூ.172.70 கோடி செலவில் 226 கிலோமீட்டர் நீளத்தில் பேருந்து சாலைகள் மற்றும் உட்புறச்சாலைகள் அமைக்கும் பணிகள் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறின்றி இரவில் நடைபெற்று வருகின்றன.
மேயர் ஆர். பிரியா அறிவுரையின்படி இப்பணிகளை கண்காணிக்க முதன்மைச் செயலாளர்/ ஆணையாளர் தலைமையில், அலுவலர்கள், பொறியாளர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு அக்குழுவினர் கண்காணிப்பில் இந்த சாலைப் பணிகள் அனைத்தும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் மேயர் ஆர்.பிரியா 11ம் தேதி (இன்று) அதிகாலை 1.30 மணி அளவில் தேனாம்பேட்டை மண்டலம், வார்டு – 110க்குட்பட்ட வள்ளுவர் கோட்டம் பிரதான சாலையில் புதிதாக சாலை அமைக்க பழைய சாலையினை அகழ்ந்தெடுக்கும் பணிகளையும், அண்ணா நகர் மண்டலம் வார்டு 101க்குட்பட்ட அண்ணா நகர் முதல் பிரதான சாலையில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் புதிதாக சாலை அமைக்கும் பணியினையும் திடீர் ஆய்வு மேற்கொண்டு பார்வையிட்டார்.
புதிதாக அமைக்கப்படும் சாலைகளைத் தரமாகவும், விரைவாகவும் முடித்திட அலுவலர்களுக்கு மேயர் உத்தரவிட்டார்,
இந்த ஆய்வுகளின்போது, நிலைக்குழுத் தலைவர் (பணிகள்) நே.சிற்றரசு, மாமன்ற உறுப்பினர் மெட்டில்டா கோவிந்தராஜ், தலைமைப் பொறியாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர். அதிகாலை 1.30 மணியளவில் மேயர் பிரியா திடீர் ஆய்வு மேற்கொண்டது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பொதுமக்கள் மேயருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.