18. வெஃகாமை
பிறர் பொருளுக்கு ஆசைப்படாதிருத்தல்
=========================================
வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவியின்
மாண்டற் கரிதாம் பயன்.
விளக்கம்:
பிறர் பொருளை விரும்பிக் கவர்வதால் வரும் ஆக்கத்தை விரும்பக் கூடாது. ஏனெனில் அதனால் ஏற்படும் பயன் சிறந்ததாக இருக்காது.







