19. புறங்கூறாமை
ஒருவரைப் பற்றி அவர் இல்லாத போது தீதாகப் பேசாதிருத்தல்
அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறங்கூறான் என்றல் இனிது (குறள் 181).
விளக்கம்
ஒருவன் அறத்தை நல்லதென்று போற்றிப் பேசாதவனாய், அறம் அல்லாதவைகளைச் செய்தாலும், பிறரைப் பற்றிப் புறங் கூறமாட்டான் என்று மற்றவர்களால் சொல்லப்படுதல் நல்லது.







